மிஸ்டர் மஜ்னு - அகில் தேறுவாரா?
மிஸ்டர் மஜ்னு
வெங்கட் அட்லூரி
ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
தமன் எஸ்எஸ்
ஸ்ரீமணி
மஜ்னு படத்தைப் பற்றி மேலே உள்ள ஆட்களைப் பற்றிச்சொன்னாலே புரிந்துவிடும். சென்ற ஆண்டு வெளியான தொலி பிரேமா இயக்குநர் வெங்கட். இந்த ஆண்டு அகில் அக்கினேனியை நம்பி இறங்கி வென்றிருக்கிறார்.
படத்தின் கதை , கீத கோவிந்தம் என பல படங்களில் பார்த்து சலித்ததுதான். படத்தின் இசையும் ,கேமராவும், அகிலின் அமர்க்களமான நடிப்பும் நம்மை காப்பாற்றுகிறது.
காஸனோவாக சுற்றித்திரிபவன், காதலின் அருமை பெருமைகளை உணர்ந்து கிருஷ்ணன் கேரக்டரிலிருந்து ராமனாக மாறுவதுதான் கதை.
எப்படி அகில்(விக்கி) பெண்களை கரெக்ட் செய்கிறார் என்பதற்கான அதிக ரெஃபரென்ஸ்கள் கிடையாது. பிரச்னையில்லை. அகில் அசால்டாக அனைத்து பெண்களையும் கையாண்டு, முதலில் முத்தம் தொடங்கி பின் அந்த பெண் கொடுக்கும் அத்தனையையும் பெறுகிறார். அதாவது, அந்த பெண்ணாக கொடுத்தால்.
நிகிதா(நிக்கி- நிதி அகர்வால்) நடிக்க நிறைய வாய்ப்புள்ளது. ஆனால் மேடம் அழகாக மாடல் போல நிற்கிறார். நடக்கிறார், கோபமாக முத்தம் கொடுக்கிறார். இறுதியாக சொன்ன வார்த்தை தவறாமல் ஒற்றை முத்தம் ஒன்றை கொடுக்கிறார். அவ்வளவுதான் மேடமின் போர்ஷன்.
அகில், தன் முதல்படத்தை கெட்ட கனவாக மறந்துவிட்டு நடித்திருக்கிறார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்து சென்டிமெண்டல் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். காஸனோவா ஸ்டைல் கடைசி வரை வருகிறது. விட்டுக்கொடுக்காமல் அனைத்து கேரக்டர்களையும் மறக்க வைத்து படத்தை தோளில் சுமந்து வென்றிருக்கிறார்.
நிறைய படங்கள் நினைவுக்கு வந்தாலும் இசையில் தமனும், ஒளிப்பதிவில் ஜார்ஜ் சி வில்லியம்சும் நமக்கு நல்ல அனுபவத்தை தருகிறார்கள். வேலை செய்த முழுக்குழுவுமே தொலி பிரேமா டீம். எனவே அந்தப்படத்தின் நினைவு வராமல் போகாது.
- கோமாளிமேடை டீம்
நன்றி: சேது மாதவன் பாலாஜி