இஸ்ரோவின் 2019 திட்டம் இதுதான்!




Image result for chandrayaan 2






இஸ்ரோ அடுத்த என்ன செய்யப்போகிறது?


சந்திரயான் - 2

ஜனவரியில் ஜிஎஸ்எல்வியில் நிலவுக்கான பயணம் தொடங்கவிருக்கிறது.

இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று சாதனங்கள் இருக்கும்.

நிலவை ஆர்பிட்டர் நூறு கி.மீ அளவுக்கு நின்று சுற்றிவரும்.


ஆறு கால்களைக் கொண்ட ரோவர் நிலவின் மண்ணை சோதிக்கும்.


ஆர்பிட்டர் நிலவின் மண்ணை படம் பிடித்து அதிலுள்ள கனிமங்களை , கதிர்வீச்சுகளை, நீரின் தடத்தை படம் பிடிக்கும்.

லேண்டர் நிலவின் உள்பரப்பு தன்மையை கண்டறிய முயற்சிக்கும்.


சிறிய செயற்கைக் கோள்கள் SSLV


2019 ஆம் ஆண்டின் மத்தியில் சிறிய செயற்கைக் கோள்களை  இஸ்ரோ விண்ணில் ஏவவிருக்கிறது.

நானோ மைக்ரோ செயற்கைக்கோள்களை ஏற்றியபடி 500 கி.கி எடையை விண்ணில் கொண்டு செல்லும் திறனுடன் ராக்கெட்டுகள் இருக்கும்.

அசெம்பிள் செய்ய 48 மணிநேரங்கள் மட்டுமே தேவை.


ADITYA L1

நாசாவின் பார்க்கருக்கு போட்டியாக இஸ்ரோ சூரியனை ஆராய உருவாக்கவிருக்கும் செயற்கைக் கோள் இது.

எடை 800 கி.கி.

பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தள்ளி நிலைநிறுத்தப்படும்.

சூரியனின் தோற்றம், அதன் தன்மை குறித்து ஆராய்வதே லட்சியம்.


நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா