ஆப் பயன்பாட்டில் சிங்கப்பூர் டாப்!
SectorQube |
சிங்கப்பூரைச் சேர்ந்த குடிமகன்கள் 46 ஆப்களை பயன்படுத்தினாலும் போனில் 115 ஆப்களை இன்ஸ்டால் செய்து வைத்துள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் மக்கள் உலகிலேயே அதிகமாக 115 ஆப்களை இன்ஸ்டால் செய்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கிறார் வாட்ஸ் அப் அன்னி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஜேட் டான்.
இதன்மூலம் ஆப்களை போணி செய்வதற்கான சூப்பர் சந்தை தயாராகி உள்ளதாக டெக் கம்பெனிகள் உற்சாகமாகியுள்ளன. “சிங்கப்பூர் மக்கள் தங்களது தினசரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஆப்களை போனில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர். வங்கி , தகவல் தொடர்பு, ஷாப்பிங், போக்குவரத்து, டேட்டிங் என ஆப்களின் பட்டியல் நீள்கிறது.” என்கிறார் டேன்.
கடந்த ஆண்டு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு பப்ஜி விளையாட்டு ஆப்.அதில் முதன்மையாக உள்ளது. இதற்கடுத்து ஹெலிக்ஸ் ஜம்ப், மொபைல் லெஜண்ட்ஸ் ஆகிய ஆப்கள் இடம்பெற்றுள்ளன. போக்மன் கோ ஆப்பும் பெருமளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க 194 பில்லியன் அளவுக்கு ஆப்கள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 104 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.
டேட்டிங் ஆப்பான டின்டர் காஃபீ மீட்ஸ் பாகெல் என்ற ஆப்களும் குறிப்பிடத்தக்க அளவு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
நன்றி: சேனல் நியூஸ் ஆசியா