நியூடெல்லா சாதனை!



Image result for nutella

நியூடெல்லா


சர்க்கரை, பாம் ஆயில், ஹசல்நட்ஸ், பால் பவுடர், புரத பவுடர், சாய் லெசிதின், வெனிலின் ஆகிய பொருட்கள் கலந்த சாக்லெட் ஸ்ப்ரெட் கலவையே நியூடெல்லா.

உலகெங்கும் 365 மில்லியன்(பத்து லட்சம்) நியூடெல்லா மக்களால் சாப்பிடப்படுகிறது.

நானூறு கிராம் ஜாரில் 52 ஹஸல்நட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இரண்டு டீஸ்பூனில் 21 கிராம் சர்க்கரை உள்ளது. யுஎஸ்டிஏ பரிந்துரைப்படி ஆண்களுக்கு 36 கிராமும், பெண்களுக்கு 25 கிராமும் சர்க்கரை பயன்படுத்தலாம்.

யூட்யூபர் மேட் ஸ்டோனி, 3 நிமிடம் 47 நிமிடங்களில் 750 கிராம் ஜாரை சாப்பிட்டு காலி செய்து சாதனை படைத்தார்.

சாக்லெட் ஸ்ப்ரெட் சந்தையில் நியூடெல்லாவின் பங்கு 54 சதவீதம். இரண்டு பில்லியன் யூரோ சந்தை.

நியூடெல்லா, தன் தயாரிப்பில் பாம் ஆயில்களை பயன்படுத்துவதால் காடுகள் அழிக்கப்படுகின்றன என சர்ச்சை கிளம்பியது. இதற்கு எதிரான போட்டியாளர் கிரிமா பான் டி ஸ்டெல்லே சூரியகாந்தி எண்ணெய்யை பயன்படுத்துவதாகவும் பத்து சதவீதம் குறைவான சர்க்கரையைப் பயன்படுத்துவதாகவும் கூறியது.