ஆராய்ச்சியில் பின்தங்கிய இந்தியா: டாப் டென்னில் முந்துகிறது சீனா




Image result for research





ஆராய்ச்சியில் பின்தங்குகிறதா இந்தியா?

அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ்(Clarivate Analytics), ஆண்டுதோறும் சிறந்த ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரித்து வருகிறது.

 ஆண்டுதோறும் வெளியிடும் கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிடும் 4 ஆயிரம் ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில், உலகெங்கிலுமுள்ள முக்கியமான துறைசார் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டுப் பட்டியலில்  வெறும் பத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர் என்பது ஆராய்ச்சி வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலோர் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள்.

அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சித்துறைகளில் ஐஐடி, ஐஐசி, ஜேஎன்யு, டிஐஎஃஆர், டிஐஎஸ்எஸ் ஆகிய அமைப்புகள் சிறப்பாக செயல்படதாது காரணமா? அல்லது இந்திய ஆராய்ச்சிகளின் தரம் குறைந்துவிட்டதா? என்ற கேள்விகள் ஆராய்ச்சி வட்டாரங்களில் எழும்பத் தொடங்கியுள்ளன.

 ”அறிவியல் துறையில் தாக்கம் ஏற்படுத்தும் தலைப்புகளை கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். குறிப்பாக வெப்பமயமாதல், பசுமை ஆற்றல், நீர்சேமிப்பு ஆகிய துறைகளின் மீது உலகளவில் கவனம் கூடியுள்ளது” என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலையைச் சேர்ந்த தினேஷ் மோகன்.

ஐந்து ஆயிரம் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட நிறுவனமான சிஎஸ்ஐஆரில்(CSIR), அசோக் பாண்டே மட்டும் தேர்வாகியுள்ளார். டாப் 5 பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் சீனாவும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஒரே நிலையில் இருந்தன. இன்று சீனாவின் பங்கு 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாகவே உள்ளது” என்கிறார் பாரத ரத்னா விருது வென்றவரும், முந்தைய கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஆராய்ச்சியாளருமான சிஎன்ஆர் ராவ்.

அலோக் -ஜோதி மிட்டல்(என்ஐடி போபால்), ரஜ்னீஷ் குமார்(ஐஐடி மெட்ராஸ்), சஞ்சீப் சாஹூ(ஐஎல்எஸ், புவனேஸ்வர்),  ராஜீவ் வர்ஸ்னே(உலக பயிர் ஆராய்ச்சிக் கழகம்,ஹைதராபாத்), சக்திவேல் ரத்தினசாமி(பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) ஆகியோர் ஆராய்ச்சியாளர்கள் கிளாரிவேட் அனாலிட்டிக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 ”இந்தியாவில் ஆராய்ச்சிகள் என்பது இன்னும் தியரி அடிப்படையில்தான் உள்ளது. இதன்விளைவாக, நம்மால் சிறப்பான ஆராய்ச்சியாளர்களை உலகிற்கு அளிக்க முடியவில்லை. கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்து மக்களின் வாழ்க்கைக்கு உதவும்படி செய்வது முக்கியம்” என்கிறார்  கணித அறிவியல் பள்ளி தலைவரான மாயங் வாஹியா.

சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். அமெரிக்கா 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிப்புகளுக்கு பெற்ற காப்புரிமைகளின் அளவில் 1 சதவீதக் கண்டுபிடிப்புகள்  மட்டுமே வளரும் நாடுகளில் நிகழ்ந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் சீனாவில் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளின் அளவு 4 சதவீதம் என வளர்ந்து வருவதை ஒப்பிட்டால் இந்தியாவின் இடம் எங்குள்ளது என உங்களுக்குப் புரியும்.  ஆராய்ச்சிகளை செய்வதில் கலாசாரம், உயர்கல்வி சிக்கல்கள், ஆராய்ச்சிக்கான அரசின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு தடைகள் உள்ளன.


சீனாவை அடிக்கடி ஒப்பீடு செய்தாலும் அதற்கும் இந்தியாவுக்கும் ஒப்பீடே செய்ய முடியாது. முக்கியக் காரணம், நாம் அறிவியல் மாநாட்டில் புஷ்பக விமானம், டார்வின் பரிணாம வளர்ச்சி தவறு என மாண்புமிகு அமைச்சர்கள் உளறுவதை சீனர்கள் செய்வதில்லை. முக்கியமாக பேசாமல் கவனமாக வேலை பார்க்கிறார்கள். அதனால் முன்னேற்றம் சாத்தியமாகிறது. 

நன்றி: தினமலர் பட்டம்