வித்திங்க்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

சிஇஎஸ் 19 ஆம் ஆண்டு ரிலீசான வாட்ச்சுகள் இவ். வெறும் வாட்சுகள் போணியாகாததால் நம் உடல்நலனைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்சுகளாகவே மாறிவிட்டன. இரண்டு வாட்ச்சுகளையும் பாருங்கள். அனலாக் டிசைனுடன் சாதாரணமாக இருக்கலாம். இரண்டுமே உங்களது உடல்நலனை கண்காணிக்கும் திறன் கொண்டவை. பதினெட்டு மாத பேட்டரி கேரண்டியுடன் இதயத்தை இதயம் நல்லெண்ணெய் போல பார்த்துக்கொள்ளும் என கம்பெனிக்காரர்கள் சத்தியம் செய்கின்றனர். உண்மையோ பொய்யோ வாங்கி கட்டிப்பார்த்து விடுங்கள்.
பக்கத்தில் ஜாம் தடவிய சப்பாத்தி போல சுருண்டிருப்பது பிபிஎம் கோர் சாதனம். டிஜிட்டல் ஸ்டெத்தாஸ்கோப் போல டென்ஷனில் இதயம் நொறுங்குகிறதா இல்லையா என கண்காணித்து உங்களுக்கு தகவல் சொல்லும். பிரயோஜனமா இல்லையா என்பதும் இதனை தேர்ந்தெடுப்பதும் உங்களது விருப்பம்.