ஏன்?எதற்கு?எப்படி? - கட்டிடங்கள் உடைவது சந்தோஷம் தருவது ஏன்?
rpmretail.com |
உருவாக்கத்தை விட அழிவு ஏன் சந்தோஷம் தருவதாக உள்ளது?
தினசரி வாழ்க்கை என்பது பலருக்கும் பிறருக்கு கட்டுப்படுவதாகவே அமைகிறது. இதன் விளைவாக நமக்கு ஏற்படும் விரக்தி, கோபம், இயலாமையை வெளிப்படுத்த வாய்ப்பே இருப்பதில்லை. இக்கோபத்தை வெளிப்படுத்த ஒரு பொருளை உடைக்கிறீர்கள். அடுத்த நொடி உங்கள் மனதும், மூளையும் ஒரு வித சுகத்தை உணரும்.
அதேசமயம் என்னுடைய டைமெக்ஸ் வாட்ச்சை என்னால் உடைக்க முடியாது. அடிடாஸ் ஷூவை தீயில் எரிக்க முடியாது என யதார்த்தமாக யோசிப்பவர்கள் யூட்பில் உடையும் கட்டிடங்கள், நொறுங்கும் வீடுகள், நிலநடுக்கங்கள் பார்த்து ரிலாக்ஸ் செய்யலாம். உடைவது என்பது ஆற்றலை வெளியிடும் நிகழ்வு என புரிந்துகொள்ளுங்கள். அதனால், உடையும் கட்டிடங்கள், தீவிபத்து, வாகன விபத்து என்பது ஆல்டைம் வேடிக்கைக்கு உரியதாக உள்ளது.