50 நாட் அவுட்! - விஷயங்கள் என்ன?



NASA, Getty Images





அரைசதம் அடிப்போம்


இந்த ஆண்டில் அரைசதத்திற்கான நிறைய விஷயங்கள் உண்டு. என்னென்ன?

நிலவில் மனிதன்!

மனிதன் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அப்போலோ 11 விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று நிலவை எட்டிப்பிடிக்கும் பயணம் தொடங்கியது. ஜூலை 20-21 இப்பயணம் தன் இலக்கை எட்டியது. நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலில் தன் காலை நிலவின் பரப்பில் வைத்தார். அதற்குப் பிறகு இருபது நிமிடங்கள் கழித்து  பஷ் ஆல்ட்ரின் தன் காலை நிலவில் ஊன்றினார். இதுவே பின்னாளில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிலவு குறித்து ஆராய ஊக்கப்படுத்தியது.


நம்பர் ஒன் சீரியல்(நவ.10)

1969 ஆம் ஆண்டு தொடங்கி வெளியான சீசேம் ஸ்ட்ரீட் என்ற சீரியல் இன்றுவரை தொடர்கிறது. அரைசத ஆண்டுகளை அநாயசமாக கடந்த இத்தொடர் குழந்தைகளுக்கு மட்டுமானதல்ல.

ஸ்டோன்வால் போராட்டம்(ஜூன் 28)

1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் ஸ்டோன்வால் இன் என்ற தன்பாலினத்தோருக்கான பாரில் போலீஸ் ரெய்டு நடத்தியது. செய்தி அறிந்ததும் மக்கள் தம் எதிர்ப்பை காட்ட போராட்டம் வெடித்தது. மறக்கமுடியாத மக்கள் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாக 2016 ஆம் ஆண்டு அந்த பார், அரசின் தேசிய நினைவகமானது.


இளமையான இன்டர்நெட்

1969 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழு அன்று இணையத்திற்கான ஐடியாக்கள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. டெக் பெருந்தலைகளின் மீட்டிங்கில் இணையத்திற்கான சிந்தனை உருவாகி வளர்ந்த கதை அது. கல்வி தொடர்பான PBS டிவி உதயமானதும் 1969 ஆம் ஆண்டு நவ.3 தான்.

வெண்டி பர்கர்

டேவ் தாமஸ் தொடங்கிய வெண்டி எனும் பர்கர் கம்பெனியும் ஐம்பது ஆண்டுகளை கடந்திருக்கிறது. நவ.15 அன்று மக்களின் ஏகோபித்த ஸ்நாக்ஸ் பிராண்ட் உருவானது.

படுக்கை போராட்டம்

ஆம்ஸ்டெர்டாமில் ஜான் லென்னன் அவரது மனைவி யோகோ ஒனோ ஆகியோர் ஹில்டன் ஹோட்டலில் படுக்கை போராட்டம் நடத்தினர். வியட்நாம் போருக்கு எதிராக. இப்போராட்டத்தை நினைவுகூருகிறோம் என்றால் அதற்கு ஐம்பது ஆனது என்றே அர்த்தம்.

ஏடிஎம் 50

நியூயார்க்கில் முதல் கெமிக்கல் பேங்க் ஏடிஎம் நிறுவப்பட்டது.

கண்மாற்று அறுவைசிகிச்சை

ஏப்ரல் 22 அன்று ஹூஸ்டனிலுள்ள மெத்தோடிஸ்ட் மருத்துவமனையில் கண்மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 55 வயது ஜான் மாடனுக்கு கண்கள் மாற்றிப் பொருத்தப்பட்டது. ஆனால் கண்கள் சரியாக பொருத்தப்படாததால் பார்வை திரும்ப கிடைக்கவில்லை. வெரி வெல், இந்த முயற்சிக்கும் வயது ஐம்பது. சியர்ஸ் ஜான் மாடன்.

நன்றி:JENNIFER M WOOD,mentalfloss

பிரபலமான இடுகைகள்