பெங்களூரு மினிமலிச ஆளுமைகள்
அர்விந்த் சிவக்குமார்
பெங்களூரைச் சேர்ந்த அர்விந்த் சிவக்குமார், மினிமலிச சிந்தனையை வாழ்வுக்கு அப்ளை செய்து வென்றிருக்கிறார்.இவர் புதிய ஆடைகளை வாங்கி பத்து ஆண்டுகளாகிறது. தன் மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கியவர், இப்போது சூழல் சிக்கனம் கருதி தன் பெற்றோருடன் ஒன்றாக சேர்ந்து வசிக்கிறார். ஏன்?
மின்சாரம், பொருட்கள் பயன்பாடு என பல விஷயங்களில் இது லாபம் என்று சிரிப்பவர், பட்டு, தோல் பொருட்களை தவிர்த்துவிட்டு வீகன் டயட்டுக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முக்கியக்காரணம், ஆறு வயதில் இவர் கலந்துகொண்ட இயற்கை பற்றிய முகாம் ஒன்று. அங்கு தேவையில்லாமல் பொருட்களை வீண்டிக்க கூடாது என அறிவுறுத்த அதனை பின்னாளிலும் கடைபிடித்து இன்று அவரைப் பற்றி நாம் பேசுமளவு வளர்ந்திருக்கிறார்.
சாகர் மன்சூர்
நான் வெகு ஆண்டுகளாக இளநீர் வாங்கினால் ஸ்ட்ரா வாங்காமல்தான் அதனைக் குடிக்கிறேன். இந்த மாற்றத்திற்கு நீங்கள் பழகினாலே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என ஆச்சரியப்படுத்துகிறார் மன்சூர்.
டிபன் பாக்ஸ், ஸ்டீல் ஸ்ட்ரா என போகுமிடமெல்லாம் கொண்டு செல்லும் புதுமைப் பெண் மன்சூர். கடந்த 2016 ஆம் ஆண்டு பேர் நெச சிட்டிஸ் என்ற கம்பெனியை தொடங்கி மூங்கில் பிரஷ், சீயக்காய், பெண்களுக்கான மாதவிலக்கு கப் ஆகியவற்றை விற்று வருகிறார். இவை அனைத்தும் சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை பொருட்களால் ஆனவை என்பது முக்கியம்.
என்னுடைய நோக்கம் வணிகமல்ல. பொருட்களை பயன்படுத்துவது குறித்த சிந்தனையை மாற்றிக்கொண்டு வாழ்க்கைமுறையை மேம்படுத்துவதுதான் என புன்னகைக்கிறார் மன்சூர்.
கோமாளிமேடை டீம்
நன்றி: லிவ்மின்ட் -சோமக் கோசல்