டேலன்டை அதிகரிக்கும் ஆப்ஸ்!








Image result for otter voice notes







உங்கள் திறனை அதிகரிக்கும் ஆப்கள்

otter voice notes

நீளமான இன்டர்வியூவை எஸ்.ராவிடம் எடுக்கிறீர்கள் என்றால் அதை எழுதும்போது பீதியாகிவிடுவீர்கள். அதில் அவரின் சிரிப்பு பாதிநேரம் என்றால் விளக்கம் 45 நிமிடத்திற்கு மேல் வரும். அதனால்தான் ஓட்டர் வாய்ஸ் நோட்ஸ் ஆப் பயன்படுத்துங்கள் என்கிறோம். 2018 ஆம் ஆண்டில் பெஸ்ட் ஆப்களில் இதுவும் ஒன்று. 600 நிமிஷங்கள் வாய்ஸ் பதிவு செய்யும் பதிவு இதில் உண்டு.

நேர்காணல், வெட்டி அரட்டை, தேறாத எடிட்டோரியல் ஆட்களின் கட்டுரை பற்றிய கவலைகளை பதிவு செய்து ஆச்சரியப்படலாம். இரண்டு மூன்றுபேர் இடியாப்பம் போல பேசினாலும் உங்கள் குரலை எளிதாக கண்டுபிடித்து தருகிறது இந்த ஆப். இதனால் மிமிக்ரி செய்யும் சூப்பர்மேன்களை தவிர பிறருக்கு உதவியாக இருக்கிறது இந்த ஆப். கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கி பயன்படுத்தி மகிழுங்கள்.



Drops

உலகெங்குமுள்ள 30 மொழிகளிலுள்ள வார்த்தைகளை எளிதாக கற்க உதவும் ஆப். கடந்தாண்டின் பெஸ்ட் ஆப்பாக கூகுள் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. புதிய மொழிகளை மாதந்தோறும் இணைத்துவருவது இந்த ஆப்பின் ஸ்பெஷல்.

ஐந்து நிமிடம் செலவழித்தாலே போதும்  எளிதாக மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என சத்தியம் செய்து ஆச்சரியம் தருகிறது இந்த ஆப். அப்போ மணிமேகலை பிரசுரத்தில் வாங்கி புத்தகத்தை என்ன செய்வது என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்யக்கூடாது ஃபோக்ஸ்! மாதம்தோறும் தரும் அப்டேட் வசதிகளால் வசியம் செய்கிறது இந்த ஆப்.

Todoist

வாரம், தினம் என என்ன வேலைகளை செய்கிறீர்கள் என லிஸ்ட் போட்டு வேலைகளை ஒழுங்காக செய்ய வைக்கிறது டுடூஸ்ட் ஆப். செடிக்கு தண்ணீர் விடவேண்டும், பப்பிக்கு பெடிகிரி வைக்கவேண்டும் என்பதையும் இதில் இணைத்து சரிவர செய்கிறோமா என்பதை கண்காணித்து உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக்கொள்ளலாம்.

உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்குமான வேலைகளை இதிலேயே கொடுத்து கண்காணிக்க முடியும். இதெல்லாம் சோம்பேறித்தனம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.

நன்றி: லிவ்மின்ட்