கல்விக்காக பிரேக்ஃபாஸ்ட் தரும் அமைப்பு - ஏமன் புதுமை
இலவச உணவு மூலம் கல்வி!- ஏமன் சாதனை
ஏமனில் நிகழும் உள்நாட்டுப் போரினால் பதிமூன்று வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதே வழக்கம். தலைநகரான சனாவில் இப்பழக்கத்தை மாற்ற முயற்சித்து வருகிறது.
சோலிடரியோஸ் சின் ஃபிரான்டெராஸ் என்ற என்ஜிஓ தன்னார்வலர்களின் ஆதரவையும் நிதியையும் பெற்று இயங்கி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி மாணவர்களின் கல்வியை காப்பாற்றியுள்ளது. ஆறிலிருந்து பதினாறு வயது நிறைவடையும் வரை மாணவர்களுக்கு உணவு வழங்குவதை(“Breakfasts to educate and protect”) நீங்கள் கவனிக்க வேண்டும். முதலில் பெரிய வரவேற்பில்லை. ஆனால் போரில் உணவின்றி தவிப்பதற்கு பள்ளி தரும் உணவிற்காக அங்கு உட்கார்ந்து விட்டு பரிகாரமாக சாப்பிட்டுவிட்டு வரலாமே என வந்த மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. இன்று 525 மாணவர்கள் இம்முறையில் அங்கு சாப்பிட்டு படித்து வருகின்றனர்.
மார்ச் 2018 இல் மெல்ல தொடங்கிய திட்டம் தற்போது ஓரளவு திடமாக நடைபெற்று வருகிறது. ”ஜவுளித்துறையைச் சேர்ந்த மக்கள் வெடிகுண்டு வெடிப்பினால் வருமான வாய்ப்பை இழந்துவிட்டனர். மூன்று ஆண்டுகளாக வருமானமின்றி உணவுக்கே தடுமாறி வருபவர்கள், குழந்தைகளின் கல்விக்கு எப்படி செலவழிப்பார்கள்?” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்.
நாட்டிலுள்ள எண்பது சதவீத குடும்பங்களில் 65 சதவீதம் பேர் உணவு வாங்கவே தடுமாறி வருகின்றனர் என்கிறது ஐ.நா அறிக்கை. ஏடன், அம்ரான், ரேடா, ஹூடைடா, அல்டோரிஹிமி ஆகிய நகரங்களில் போர் பாதிப்புகள் அதிகம்.