ஜிபிஎஸ்ஸைக் கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா?

ஏன்?எதற்கு? எப்படி?


Who really discovered GPS? ©Getty
sciencefocus


ஜிபிஎஸ்ஸை கண்டுபிடித்தது யார்?

1970 ஆம் ஆண்டு ஜிபிஎஸ்ஸை கண்டுபிடித்தது அமெரிக்க ஆயுதப்படைதான். இன்று இந்த ஜிபிஎஸ் வசதி மூலம்தான் தொல்பொருள் ஆய்வு தொடங்கி தானியங்கி கார்கள் வரை இயங்குகின்றன. 

2003 ஆம் ஆண்டு இயற்பியலாளர் இவான் கெட்டிங் - பொறியாளர் கலோனல் பிராட்ஃபோர்டு பார்கின்சன் ஆகியோருக்கு ஜிபிஎஸ்ஸை நடைமுறைப்படுத்தியதற்காக அமெரிக்க தேசிய அகாடமி விருதளித்து பாராட்டியது. ஜிபிஎஸ் உருவாக்கத்தில் இவர்களது பங்கு என்ன என்பது பற்றி பிறகு யாரும் கேள்வியே கேட்கவில்லை. 1950 ஆம் ஆண்டு கெட்டிங் குழுவினர், பூமியிலுள்ள இடங்களை சரியாக குறிக்க முயற்சித்தனர். ஆனால் அப்போது அமலாகியிருந்த க்வார்ட்ஸ் வாட்சை இவர்கள் நம்பவில்லை. 


பின்னர் 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கடற்படை அணுக்கடிகாரத்தை முன்வைத்து செயல்படத் தொடங்கியது. இந்த திட்டத்தை கடற்படை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ரோஜர் ஈஸ்டன் வழிநடத்தினார். ஆனால் 2010 ஆம் ஆண்டு வரை ஈஸ்டன் அமெரிக்க தேசிய கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தில் சேரவில்லை.