ராணுவத்தில் LGBTQ அனுமதிக்கலாமா?




Image result for lgbtq





தன்பாலின ஈர்ப்பாளர்களை அனுமதிக்கும் நாடுகள்!


தன்பாலின ஈர்ப்பை தவறு கிடையாது என உச்சநீதிமன்றம் கூறியதோடு அதன்மீதான தண்டனைச்சட்டங்களையும் நீக்கியுள்ளது. ஆனால் ராணுவ ஜெனரல் பிபின் ராவத் மிலிட்டரியில் தன்பாலின ஆட்களுக்கு இடமில்லை என பிடிவாதம் பிடித்து வருகிறார். பிற நாடுகள் இதில் நெகிழ்வாக நடந்துகொள்கின்றன.

பொருளாதாரம் மட்டுமல்ல புதிய விஷயங்களை ஏற்பதிலும் இந்தியா மிக மெதுவாகவே இயங்குகிறது. 2014 ஆம் ஆண்டிலேயே பெரும்பாலான நாடுகள் ராணுவத்திலும் ஆயுதப்படையிலும் சேர்க்க அனுமதி அளித்துவிட்டன.

அமெரிக்காவில் பில் கிளிண்டன் ஆட்சிக்காலத்தில் DADT என்ற பெயரில் தன்பாலின ஈர்ப்பாளர்களை ராணுவத்தில் சேர்க்க தடை நிலவியது. ஆனால் பராக் ஒபாமா இதனை மாற்றி எல்ஜிபிடியினரை ராணுவத்தில் சேர்க்க அனுமதித்தார்.

இங்கிலாந்திலும் முதலில் எல்ஜிபிடியினருக்கு தடை இருந்தது. 2000 ஆம் ஆண்டிலேயே இத்தடையை இங்கிலாந்து அரசு விலக்கிக் கொண்டுவிட்டது.  அர்ஜென்டினாவிலும் 2009 ஆம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு செயல்பாடுகளுக்கு சிறைதண்டனை கிடையாது என அறிவித்துவிட்டது.

1992 ஆம் ஆண்டே ஆஸ்திரேலிய அரசு எல்ஜிபிடியினர் ராணுவத்தில் சேர இருந்த தடையை விலக்கிக் கொண்டுவிட்டது.

தென் ஆப்பிரிக்க 1998 ஆம் ஆண்டு எல்ஜிபிடியினர் ராணுவத்தில் சேர இருந்த சட்டப்பிரிவை விலக்கி அவர்களையும் பணியில் சேர்க்க ஆர்வம் காட்டியது. 

இந்தியாவில் ஏதும் மாறவில்லை. ராணுவச்சட்டப்படி தன்பாலின ஈர்ப்பு செயல்பாடுகளுக்கு பத்து ஆண்டுகள் சிறைதண்டனை உண்டு.

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா