சிறந்த காலண்டர் ஆப்ஸ் இவைதான்!






Image result for calendar 2019





சிறந்த காலண்டர் ஆப்ஸ்!

அவுட்லுக்

விண்டோஸில் உள்ள அவுட்லுக் என்றாலே பலருக்கும் எரிச்சலாகிவிடும். ஆனால் நிஜமாகவே 2019 ஆம் ஆண்டு அவுட்லுக் காலண்டர் கொஞ்சம் விஷயமுள்ளதுதான். விவரமாக வேலை பார்த்தால் இமெயிலிலுள்ள பல விஷயங்களை காலண்டரில் இணைத்து வேலை பார்த்து வெற்றிக்கொடி நாட்டலாம்.

ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ்ஸில் பயன்படுத்தும் இந்த காலண்டர் ஆப், லொகேஷன், நண்பர்களின் புகைப்படங்களை இணைப்பது உள்ளிட்ட பல புதிய உற்சாக சங்கதிகளைக் கொண்டுள்ளது. ட்ராப்பாக்ஸ், எவர்நோட் உள்ளிட்ட வசதிகளையும் இதில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 
Fantastical (iOS)
இது ஐஓஎஸ்ஸிற்கு மட்டுமான சிறப்பான கட்டுமானங்களைக் கொண்ட ஆப். அடிப்படையாக காலண்டர் ஆப்பில் என்ன எதிர்பார்ப்பீர்கள். அனைத்தும் இதில் உண்டு. டே டிக்கர் எனும் வசதி குறிப்பிட்ட நாளை சிறப்பாக குறித்து வைக்க உதவுகிறது. மேலும் இதிலிருந்து குறிப்பிட்ட சந்திப்பு குறித்து நண்பர்களுக்கும் செய்தி பரிமாறமுடிவது ஸ்பெஷல். 

CloudCal (Android)


மேலே பார்த்த ஐஓஎஸ் ஆப் போல இது முழுக்க ஆண்ட்ராய்ட் பசங்களுக்கானது.  ஈஸியாக காலண்டர் நிகழ்வுகளுக்குள் ஜம்ப் ஆகி காலண்டர் நாட்களை பார்க்க முடியும். அடுத்தடுத்த டைட் ஷெட்யூல்களையும் எளிதாக சரிபார்க்க முடியும். அவுட்லுக், கூகுள் காலண்டர்களையும் இதில் எளிதாக இணைத்துக்கொள்ள முடியும்.

Calendars (iOS)


கிளியராக சொல்லிவிட்டார்கள். இதுதான் இந்த காலண்டரின் குணமும். நேர்த்தியாக தெளிவாக தேவையான கிளியராக சொல்லிவிட்டார்கள். இதுதான் இந்த காலண்டரின் குணமும். நேர்த்தியாக தெளிவாக தேவையான விஷயங்களை குறித்து வைத்து வேலைகளை சூப்பராக முடிக்கலாம். ஆன்லைன் ஆப்லைனிலும் இதனைப் பயன்படுத்தலாம். ஏழு நாட்களுக்கு மட்டும்தான் இலவசமாக பயன்படுத்த முடியும். அப்புறம் அனைத்தும் காசுதான். 

நன்றி: கிஸ்மோடோ.காம்