அன்று முதல் இன்றுவரை - ரோபோக்கள் வரலாறு
ரோபோக்கள் வரலாறு
1939
மோட்டார்கள், போட்டோவோல்டைக் செல்களைப் பயன்படுத்தி ரோபோக்கள் உருவாக்கப்பட்டன.
வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கார்ப் கம்பெனியைச் சேர்ந்தவர் கண்டுபிடித்த எலக்ட்ரோ, இவ்வகையில் ஏழடி உயரம் கொண்டது. பேச, நடக்க, ஸ்டைலாக சிகரெட் புகைக்கும் திறன் கொண்டது. எடை 265 பவுண்டுகள்.
1950
ஆலன் டூரிங், மனிதனைப் போல யோசித்து செயல்படும் மெஷினை உருவாக்க முயற்சித்தார். இதனை டூரிங் டெஸ்ட் என்று குறிப்பிட்டனர்.
1969
இன்றைய தானியங்கி ரோபோ கைகளுக்கான அச்சாரம் அன்றே போட்டதுதான். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் சீன்மென் ரோபோ கரத்தை உருவாக்கினார்.
1973
ஜப்பானைச் சேர்ந்த வசிடா பல்கலைக்கழக பேராசிரியர் இச்சிரோ காடோ, வாபோட் -1 என்ற மனிதர்களை ஒத்த ரோபாட்டை உருவாக்கினர்.
1999
அனைத்து எலக்ட்ரிக் பொருட்களையும் சுளுவாக போணி செய்யும் சோனி , பெட் விலங்கான அய்போவை உருவாக்கியது. ரோபோட்டிக் நாயான அய்போ, தன் எஜமானருடன் வளவளவென பேசும் தன்மை கொண்டது.
2000
சோனி பாய்ந்தால் ஹோண்டா சும்மாயிருக்குமா? அசிமோ என்ற ஹியூமனாய்டு ரோபோவை உருவாக்கியது ஹோண்டா.
2004
ஹெலிகாப்டர் டைப்பில் சிறிய ரோபாட்டுகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.
செய்கோ எப்சன் மைக்ரோ அளவில் ஹெலிகாப்டர் மாதிரிகளை உருவாக்கி வெளியிட்டது.
2011
டிஸ்கவரி விண்கலத்தில் ஹியூமனாய்டு ரோபோ ரோபோநாட் 2 அறிமுகப்படுத்தப்பட்டது.
2015
2017 ஆம் ஆண்டு சோபியா என்ற ரோபோவுக்கு குடியுரிமையை வழங்கி சாதனை புரிந்தது சவுதி அரேபியா.
2018
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரோபோஃப்ளை வயர்லெஸ் வசதியுடன் உருவாகி ஆச்சரியப்படுத்தியது. இதன் எடை பல்குத்தும் குச்சியின் எடைதான்.
நன்றி: லிவ் மின்ட் - நிதின் ஸ்ரீதர்