பப்ஜிக்கு தடை - மாணவர்களுக்கு உதவுமா?



Image result for pubg ban



பள்ளிகளில் பப்ஜிக்கு தடை?





குஜராத் அரசு, அரசுப்பள்ளிகளில் பப்ஜி விளையாடுவதற்கு தடை ஆணை பிறப்பித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டான ப ப்ஜியை உலகளவில் டீம் சேர்த்துக்கொண்டு விளையாடலாம். இதுவரை ரிலீசான ஆப், விளையாட்டு தரவிறக்கம் என அனைத்திலும் இந்த விளையாட்டுதான் முன்னிலை பெற்றுள்ளது.

அவ்வளவு ஏன்? பரீக்ஷா பெர் சாச்சா நிகழ்வு டெல்லியில் நடந்தது. அப்போது தன் மகன் ஆன்லைன் கேமில் விழுந்து கிடக்கிறான். படிக்கவே மாட்டேங்கிறான் என ஒரு அம்மணி புகார் கொடுத்தார். உடனே பதிலளித்த மோடி, ஆன்லைன் கேம் என்கிறீர்களே? ப ப்ஜியா? என பேசி அரங்கு அதிர கைத்தட்டல்களைப் பெற்றார். ட்ரெண்டிங் அப்படி பாய்ந்துகொண்டிருக்கிறது.

நிலைமை அப்படியொண்ணும் சுமுகமாக இல்லை. டெல்லியைச் சேர்ந்த ப ப்ஜி விளையாட்டு வெறியர், தன் பெற்றோரையும் தங்கையும் கொன்றுவிட்டார். பெங்களூரைச் சேர்ந்த சிறுவனுக்கு ப ப்ஜி போதைக்கான சிகிச்சை வழங்கப்படும் அவசர நிலைமை. ஜம்மு காஷ்மீரில் உடற்பயிற்சியாளர் ஒருவர் விளையாட்டு லெவல்களை சூப்பராக ஜெயித்ததற்காக தன்னைத்தானே அடித்து காயப்படுத்திக்கொண்டு ஆஸ்பத்திரியில் கட்டுப்போட்டுக்கொண்டு கிடக்கிறார்.


முட்டாள்தனத்தை மூர்க்கமாக செய்வதில் இந்தியவர்கள் முதன்மையானவர்கள் என்பதால் அரசு தடை விதிக்க யோசித்து வருகிறது. இதில் குஜராத் அரசு முந்திக்கொண்டு தடையே விதித்துவிட்டது.

அனைத்து விளையாட்டுகளும் மோசம் கிடையாது. ப ப்ஜியைப் பொருத்தவரை அதில் நம்மை போதைக்கு ஆட்படுத்துவது அன்லிமிடெட் வன்முறைதான். சரி தவறு என்ற எல்லையை அழிக்கும் பேராபத்தை ப ப்ஜி செய்கிறது என்கிறார் மருத்துவர் பூர்ணிமா நாகராஜா.

இணையம் பரிபூரண சுதந்திரத்தை உருவாக்குவதால் எங்கு நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பது குழந்தைகளுக்கு தெரியாது என்பது இதிலுள்ள பிரச்னை. கடந்த இருபது ஆண்டுகளாக மனநலன் சார்ந்த பிரச்னைகள் உலகளவில் அதிகரித்து வருவதற்கு கணினி விளையாட்டுகள்தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

விளையாட்டு என்பது தனிமனிதரின் வன்முறை மனோபாவத்திற்கு காரணம் கிடையாது. அரசு, இதுதொடர்பான பிரச்னைகளின் உண்மையான பின்னணியை அறிந்து நடவடிக்கை எடுப்பதே தேவை. ப ப்ஜி என்று குறிப்பிட்ட விளையாட்டு என்றில்லை, வெற்றி, ஜெயிக்கவேண்டும் என்ற உந்துதலை இவ்விளையாட்டுகள் ஏற்படுத்துகின்றன என்கிறார் பாலாஜி ராமநாராயணன்.

அரசு தடைசெய்வதன் மூலம் விளையாட்டின் பரவலை தடுக்க முடியாது என சத்தியம் செய்கிறது டெக் வட்டாரம். எளிதாக விளையாட்டின் ஏபிகே ஃபைல் கிடைக்கிறது. விளையாட்டிற்கான விழிப்புணர்வு பிரசாரம் சரியானது. தடை தவறான செயல்பாடு என்கிறது விளையாட்டு ஆர்வலர்களின் எண்ணம்.

விளையாட்டு தொடர்பான மனநல பிரச்னைகளை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது உண்மை. குறிப்பிட்ட கேம் என்பதைத் தாண்டி சமூகம் இது குறித்த கவனத்தை உணர்வது அவசியம். சிறுவர்கள் தனித்திருப்பது, விளையாட்டின் மூலம் அறிவைப் பெறுவது என்பது சரியானதல்ல என்கிறார் மருத்துவர் ரமேஷ்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல் - நம்ரதா ஸ்ரீவஸ்தவா, ரேஷ்மி சக்ரவர்த்தி