அன்டார்டிகா பனி உருகினால் என்ன ஆகும்?





12435253353_15ad92569d_k.jpg




அன்டார்டிகாவில் ஐஸ் இழப்பு


1979 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் அன்டார்டிகா 40 பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட பனிக்கட்டிகளை இழந்துவிட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் இந்த எண்ணிக்கை 252 டன்களாக மாறியுள்ளது தெரிய வந்தது.


கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து செய்த ஆராய்ச்சியில் 18 அன்டார்டிகா பகுதிகள், 176 ஆறுகளின் படுகைகளை ஆராய்ந்து அறிக்கையை Proceedings of the National Academy of Sciences, இதழில் பிரசுரம் செய்துள்ளனர். 

அன்டார்டிகாவில் ஐஸ் கரைந்தால் எனக்கென்ன என நீங்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சுற்றிக்கொண்டிருப்பது ஆபத்து. கடலில் கலக்கும் பனிக்கட்டிகளால் கடல்மட்டம் உயருமே. 1990 களிலிருந்து இன்றுவரை எட்டு அங்குலத்துக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. முதலில் கடலை ஒட்டியுள்ள தீவுகள், நாடுகள் இதனால் பிரச்னைக்கு உள்ளாகும். வேறென்ன? மூழ்கிவிடும். 2100 ஆம் ஆண்டு இதே வேகத்தில் போனால் மூன்று அடி கடல்மட்டம் உயரும். 

அன்டார்டிகா ஐஸ் முழுக்க கரைந்தால் 187.66 அடி கடல் மட்டம் உயரும். நாம் என்னாவோம் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.