45 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா



Image result for jobless growth
The Independent





வேலைவாய்ப்பு சரிவு எவ்வளவு?

2017 மற்றும் 18 ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் சரிவடைந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் வரும் நேரத்தில் வேலைவாய்ப்பு விவரங்களை வெளியிட பாஜக தயங்கி வருகிறது. தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் வேலையின்மையின் அளவு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அளவு 1972-73 ஆண்டுகளை விட அதிகம்.

வேலைவாய்ப்பு குறித்த அறிக்கை அரசியலாக, முக்கியமான அதிகாரிகள்(பிசி மோகனன், ஜே மீனாட்சி) அரசின் நெருக்கடியைப் பொறுக்க முடியாமல் பதவியை கைவிட்டு விலகியுள்ளனர். முன்னமே வெளியிட தயாரித்த அறிக்கையை வெளியிட தாமதம் செய்தது காரணம் என ஊடகங்களிடம் பேசியுள்ளார் மோகனன்.

இந்த அறிக்கையில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம் என இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இதற்கு முக்கியக் காரணமாக பொருளாதார வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

நன்றி: எகனாமிக் டைம்ஸ்







பிரபலமான இடுகைகள்