இடுகைகள்

சினிமா விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமாவின் திரைக்கதைப்படி, நிஜவாழ்க்கை சம்பவங்கள் நடக்கத் தொடங்கினால்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி - வக்கந்தம் வம்சி

படம்
  எக்ஸ்ட்ரா ஆர்டினரி தெலுங்கு நிதின், ஶ்ரீலீலா, ராஜசேகர், சம்பத் சினிமா கதை, ஜூனியர் ஆர்டிஸ்டின் வாழ்க்கையில்  நிஜத்தில் நடக்க ஆரம்பித்தால்.. என்னவாகும்? தெலுங்குப்படங்கள் பார்க்க பிரம்மாண்டவையாக தெரிந்தாலும் அதில் கொண்டாட்ட வஸ்துகளே அதிகம். கதை என்று பார்த்தால் தக்னூண்டு தெரியும். விவேக் ஆத்ரேயா, தருண் பாஸ்கர், கிரிஷ் போன்ற மிகச்சில இயக்குநர்கள்தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகத்துவத்தை குறைத்து படம் எடுக்கிறார்கள்.  இந்த படத்தின் இயக்குநர் இதற்கு முன்னர் நா பேரு சூர்யா என்ற தேசியவாத படத்தை எடுத்திருந்தார். அதில், குறைந்தபட்சம் காட்சிகள் கோர்வையாக இருக்கும். கதை என்று பார்த்தாலும் மோசமில்லை என்ற ரகத்தில் இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை. அதை விடுங்கள். ஆனால் நிதின் நடித்துள்ள இந்தப்படம் தெலுங்கு படங்களை ஸ்பூஃப் செய்வது போல ஒரு படமோ என்று கூட தோன்றுகிறது. பாதிக்கும் மேல்தான், அப்படியான படம் கூட இல்லை என்று தெரிகிறது. சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட். அவனது அப்பா சம்பளத்தில்தான் குடும்பமே ஓடுகிறது.வித்தியாசமான பாத்திரங்களை நடிக்கும் ஆசை நாயகனுக்கு. ஆனால் பெரிதாக வாய்ப்பு க

ஹவாலா குற்றவாளியை திக்கு முக்காடச் செய்யும் அப்பாவி கணக்காளன்! பால தந்தானா - தெலுங்கு

படம்
  பால தந்தானா - தெலுங்கு பால தந்தனா தெலுங்கு ஶ்ரீவிஷ்ணு, கேத்தரின் தெரசா தமிழில் போடு தந்தானா தமிழ்ப்படம் யூட்யூப் சேனல் ‘’கெட்டது செய்றவங்களை கேட்வி கேட்கறதில்ல. ஆனா, நல்லது பண்றவங்கள கேள்வி கேட்கிறோம். இதுல என்ன நியாயம் இருக்கு. அதனால, சந்து மும்பைல என்ன பண்ணிட்டிருந்தான்னு நா கேட்கல’’ என படத்தின் இறுதியில் சசிரேகா மனதுக்குள் நினைத்தபடி சந்துவின் பின்னாலே நடந்த்து   வெளியே வருகிறார். உண்மையில் இது சுவாரசியமான இறுதிக்காட்சி. இதை வைத்து ஸ்பின்ஆஃப் படம் ஒன்றை எடுக்காம். சந்து மும்பையில் என்ன செய்துகொண்டிருந்தார் என … அதுவும் சுவாரசியமாகவே இருக்கும். தெலுங்கில பால தந்தானா, தமிழில் போடு தந்தானாவாகியிருக்கிறது. ஸ்லோபர்னர் படம். மெதுவாகத்தான் கதையில் என்ன நடந்திருக்கிறது என தெரிந்துகொள்கிறோம். அதுவரை, வெப்சைட் செய்தியாளரான சசிரேகா போலவேதான் நாமும் இருக்கிறோம். பிரபாநியூஸ்.காம் என வெப்சைட் ஒன்றில் செய்தியாளராக சசிரேகா வேலை செய்கிறார். இவருக்கு செய்தி என்றால், மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டுமென நினைக்கிறார். அப்படி பாடுபட்டு எழுதும் செய்திகளால் நிறைய பிரச்னைகள, மிரட்டல்கள்

இதயப்பூர்வமாக கேட்கும் மன்னிப்பு, விரோதத்தை கரைக்கும் -சௌதி வெல்லாக்கா - தருண் மூர்த்தி

படம்
  சௌதி வெல்லாக்கா சௌதி வெல்லாக்கா 2022 மலையாளம் இயக்கம் தருண் மூர்த்தி இசை – பாலி ஃபிரான்சிஸ் ஒளிப்பதிவு – சரண் வேலாயுதன் நாயர் தென்னம் மட்டையின் நடுவிலுள்ள தண்டுப்பகுதி. அதுதான் படத்தில் விவரிக்கப்படும் மரண ஆயுதம். நண்பர்களோடு கிரிக் கெட் விளையாடும்போது பந்து எதிர்பாராதவிதமாக வயதான பெண்மணி மீது விழுந்து விடுகிறது. அதைப் பொறுக்காமல் கோபம் கொண்டு சிறுவனை தென்னை மட்டையின் தண்டை எடுத்து அடிக்கிறாள். இதில் சிறுவனுக்கு விழாமல் இருந்த பல் கூட பதற்றத்தில் விழுந்துவிடுகிறது. இந்த விவகாரத்தை அந்த முதிய பெண்மணி மீது துவேஷம் பாராட்டும் வீட்டுக்காரர், வழக்கு போடும் நிலைக்கு கொண்டு போகிறார். அந்த வழக்கும், வழக்கில் தொடர்புடையோர் வாழ்க்கையில் நெருக்கடியில் மாட்டுகிறது.   இறுதியில் வழக்கு என்னவானது என்பதே படம். நீதிமன்றத்தில் பல்லாண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்தும் படம் என இறுதியில்   சொல்லுகிறார்கள். ஆனால் படம் நெடுக, ஆணவத்தால் அகங்காரத்தால் வன்மத்தால் காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி நலிந்து போகிறது என்பதை அதே தன்மையில்

அக்காவின் சினிமா கனவை நிறைவேற்ற அப்பாவுடன் போராடும் மகள்! - ஆ அம்மாயி குறின்ஞ்சி மீக்கு செப்பாலி

படம்
  ஆ அம்மாயி குறின்ச்சி மீக்கு செப்பாலி இயக்கம் மோகன் கிருஷ்ணா இந்திரகாந்தி இசை விவேக் சாகர் கீர்த்தி ஷெட்டி, ஶ்ரீகாந்த் அய்யங்கார், வெண்ணிலா கிஷோர் சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் கதை. வணிகப் படங்கள் எடுக்கும் இயக்குநர், குப்பைத்தொட்டியில் கிடந்து பிலிம் ரோல் ஒன்றை எடுக்கிறார். அதை வீடியோ மாற்றும்போது அழகான பெண் ஒருவரைப் பார்க்கிறார். அந்த பெண்ணை அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அந்த பெண் நீங்கள் பார்த்த படத்தில் உள்ள பெண் நானல்ல, தனது அக்கா என்கிறார். அவரது அக்காவிற்கு என்ன ஆனது, பிலிம் ரோல் எதற்காக குப்பையில் வீசப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் பயணம்தான் படத்தின் மையக் காட்சி. வணிக வெற்றிகளை பெறும் இயக்குநர், தனது மனம் சொல்லும்படி ஒரு படத்தை எடுக்க நினைக்கிறார். அதில் வரும் பெரிய தடை தனக்குப் பிடித்த பெண் நாயகியாக   வரவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அந்த பெண் ஒரு கண்மருத்துவர். அவள் மட்டுமல்ல அவளது குடுபத்தாருக்கே சினிமா என்றால் உடம்பில் அமிலம் தடவியது போல. அவ்வளவு எரிச்சல். அவர்கள் அப்படி எரிச்சல்படவும் கோபம் கொள்ளவும் காரணமான ஒரு சம்பவம் கடந்தகாலத்தில் புத

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

10 ஆயிரம் கோடி ரூபாயை டிராமா ஆடி கொள்ளையடிக்கும் டுபாக்கூர் கில்லாடி - கில்லாடி - ரவிதேஜா, டிம்பிள், மீனாட்சி

படம்
  கில்லாடி  ரவி தேஜா, டிம்பிள் ஹயாதி, மீனாட்சி சௌத்ரி, முரளி சர்மா, வெண்ணிலா கிஷோர், அனுசுயா பணம் மட்டுமே முக்கியம் என நம்பும் கில்லாடி ஒருவன், இந்தியாவில் பத்தாயிரம் கோடியை கொள்ளையடிக்கும் கதை.  இந்திய அரசியல்வாதி ஒருவர், எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து மாநில முதல் அமைச்சர் ஆக நினைக்கிறார். இதற்காக அவர் பத்தாயிரம் கோடியை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருகிறார். அதை கார்ப்பரேட் நிறுவனம் மூலம் அரசியல்வாதிகளுக்கு விநியோகிக்க நினைக்கிறார். இதை தடுக்கும் வரிவருவாய்துறை, பிற அரசியல்வாதிகளின் குழு, கில்லாடி திருடன் மோகன் காந்தி. இவர்களில் யார் பணத்தை கொள்ளையடித்தார்கள், வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  படத்தில் மோகன் காந்தியாக எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் பணம் அதை எப்படியாவது திறமை காட்டி கொள்ளையடிக்கவேண்டும் என ஆர்வத்தோடு திரியும் பாத்திரத்தில் ரவி தேஜா அசத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்து உடல் வளைத்து உழைத்திருக்கிறவர் வேறு யார் டிம்பிள் ஹயாத்திதான்.  பணத்தை கொள்ளையடிப்பது பற்றி கில்லாடி பாடலில் நெடுக சொல்லிவிடுகிறார்கள். இதில் மோகன் காந்தியின் குழுவில் உள்ளவர்கள் தனியா

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆ

கல்விச்சான்றிதழ் மோசடிகளை வெளியே கொண்டு வரும் டிவி ரிப்போர்ட்டரின் அக, புறவாழ்க்கை! - அர்ஜூன் சுரவரம் - நிகில் சித்தார்த்

படம்
                  பேக் டூ பேக்காக நிகில் சித்தார்த்தின் அடுத்த படம் இது.  அர்ஜூன் சுரவனம் நிகில் சித்தார்த், லாவண்யா திரிபாதி இயக்கம் டி சந்தோஷ் இசை சாம் சிஎஸ் கணிதன் படத்தை தெலுங்கு மொழியில் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் உருப்படியான விஷயம். காதல், காதல் தொடர்பான காட்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவில்லை. படத்திலும் அதற்கான தேவையில்லை. போலி கல்வி சான்றிதழ்களை உருவாக்கி தவறான மனிதர்களை தற்குறிகளை அரசு வேலை, தனியார் வேலைக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனம் மாபியா ஆட்களை வைத்து செய்கிறது. இதை அடையாளம் கண்டுபிடித்து தனது மீதுள்ள களங்கத்தையும் பிற மக்களையும் எப்படி ஒருவன் காப்பாற்றுகிறான் என்பதே.... முதல் காட்சியில் ப ப் ஒன்றில் கார் கீ போல தெரியும் ஸ்பை கேம் ஒன்றை பொறுத்தி காட்சிகளை படம் பிடிக்கிறார்கள். அதை ஒருவன் தட்டிவிட்டுவிட அது நாயகி கையில் மாட்டுகிறது. அவள் அதை உடனே தரமாட்டேன் என நிறைய விவரங்களைக் கேட்கிறாள். அதற்கு அர்ஜூன் போலியான தகவல்களைக் கொடுக்கிறான். பிறகு சூழல் என்னாகிறது என்றால், அதே டிவி சேனலில் பப்பில் குத்து ஆட்டம் ஆடிய நாயகியும் சேர்கிறாள். பிறகுதான் அர்ஜூன் சொன்ன பொய

காதலுக்காக சாராய வியாபாரியுடன் மோதும் காதலன்! - வீடு தேடா - நிகில் சித்தார்த், பூஜா போஸ்

படம்
                      வீடு தேடா நிகில் சித்தார்த், பூஜா போஸ்  இயக்குநர் சின்னி கிருஷ்ணா இசை சக்ரி         திருப்பதியில் தனது அக்கா, மாமாவுடன் வாழ்ந்து வருகிறான் கத்தி சீனு. சீனுவைப் பொறுத்தவரை காதல் கடிதம் கொடுப்பதே முதல் பணி. பெண் ஒகே என்றால் மஜாப்பா மஜா என வாழ்ந்து வருகிறான். இந்த நேரத்தில் அவனுக்கு லவ்குமார் என்ற மனிதர் கிடைக்கிறார். அவரை ஏமாற்றி உடை, உணவு என அத்தனையும் ரெடி செய்துகொண்டு திருமணம் ஒன்றுக்கு செல்கிறார்கள்.    அங்குதான் சீனு, மேக்னா என்ற வெள்ளை அழகியைப் பார்க்கிறான். பார்த்தவுடனே பென் ஹியூமன் தமிழ் பாப் பாடல் வரியைப் போல ஃப்யூச்சர் ஆத்துக்காரி என மனதில் விதை விழுந்துவிடுகிறது. அப்புறம் என்ன அந்த பெண்ணை வளைக்க தன்னால் முடிந்த அத்தனையும் செய்கிறார். இத்தனைக்கும் அந்த பெண் குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். காதல் கூடாது என்பதே ஒரே கொள்கை. எப்படியாவது அவளை கரெக்ட் செய்துவிட முயல்கிறான் சீனு. அந்த பெண்ணும் அவனின் கடி ஜோக்குகளுக்கு மயங்கி சிரித்து தனது சோகங்களை மறந்துவிடும் நேரத்தில் அவளது தோழிகள் அவள் சந்தோஷத்தைப் பொறுக்காமல் நீ காதலிக்கிறே இது பாவம் கிறிஸ்துவ பாதிர

இரட்டையர்களாக வந்து காதலியின் பெற்றோருக்கு பாடம் புகட்டும் நாயகன்! - மகாரதி - பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்

படம்
  மகாரதி   பாலைய்யா, சினேகா, மீரா ஜாஸ்மின்  இயக்குநர் - பி. வாசு வாய்ப்பாட்டு கற்றுத்தரும் பள்ளி, நடனப்பள்ளி என இரண்டு பள்ளிகள் அருகருகே உள்ளன. இதை நடத்தும் நிறுவனர்கள் ஆண், பெண் என இருவருமே ஒருவரையொருவர் மிஞ்சவேண்டும் என துடிப்பாக உள்ளனர். இதில், வாய்ப்பாட்டு சொல்லித்தரும் பள்ளியில் பாலா என்ற ஆசிரியர் உள்ளார்.  இன்னொரு பள்ளியான நடனப்பள்ளியின் நிறுவனரான பெண்மணி வாய்ப்பாட்டு பள்ளியை மிஞ்ச நினைக்கிறார். ஆனால் அவருக்கேற்ற நடனம் சொல்லித்தரும் மாஸ்டர் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிருஷ்ணா என்ற நபர் அறிமுகம் ஆகிறார். வாய்ப்பாட்டு பள்ளி, நடனப்பள்ளி என இரண்டிலும் வேலை செய்யும் பாலா, கிருஷ்ணா ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கிறார்கள், விக் மட்டும் வேறுவேறு. யார் இவர்கள் என்பதுதான் கதை.  பாலைய்யா நடித்த மோசமான படங்களின் பட்டியலில் இந்தப்படமும் ஒன்று என்ற வகையில் சேருகிறது. இதில் பாலைய்யா என்ற பெயரில் வரும் ஃபிளாஷ்பேக் மட்டும் கோவை சரளா புண்ணியத்தில் சற்று ஆறுதலாக உள்ளது.  மற்றபடி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் பாட்டு கற்றது என வரும் வசனமும் படம் நெடுக பாலைய்யா ஆடும் நடனமும் பாட்டும் பொறுத்துக்கொள்ளவே

பொப்பிலி சிங்கம் டாடியாகும் உணர்ச்சிகரமான கதை! - பொப்பிலி சிம்ஹம் - பாலைய்யா, மீனா, ரோஜா

படம்
  பொப்பிலி சிம்ஹம், 1994 பாலைய்யா, மீனா, ரோஜா Director:  A. Kodandarami Reddy Story by:  V. Vijayendra Prasad Language:  Telugu சரத்பாபு, ஆற்றில் நடைபெறும் விபத்தில் சிறுவன் ஒருவனைக் காப்பாற்றுகிறார். அவன் அவருக்கு மாப்பிள்ளையாகும் முறை கொண்டவன. அவனை ஊர் தலைவராக்க முயல்கிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி எதிர்கொண்டார், இதை எதிர்க்கும்  மனிதர் அதே ஊரில் இருக்கிறார்.  பொப்பிலி என்ற ஊரின் தலைவர்தான் விஜய ராகவ பூபதி. அதாவது பாலைய்யா. பதவியில் அமர்வதற்கான நாளன்று ஊர் பெரிய மனிதரின் அதாவது முதன்மை வில்லனின் மகனை அடித்து துவைத்துதான்  நாற்காலியில் அமர்கிறார். ஊரில் நடக்கும் அத்தனை பிரச்னைகளையும் வழக்குகளையும் அவர்தான் தீர்த்து வைக்கிறார். ஊருக்கே பெரிய மனிதர், கறைபடாத நேர்மையான மனம்தான் அங்கு இருக்கவேண்டும்.  தாய்மாமன் சரத் பாபுவின் ஆதரவில்தான் விஜய் நாற்காலியில் அமர்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவரை எதிர்த்து நின்று ஊர் முன்னே செருப்பால் அடிக்கும் தண்டனையைக் கொடுக்க நேரிடுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிரச்னையாகிறது. இந்த விவகாரத்திற்கு முன்னரே தாய்மகன் மகள் லலிதா, முறை மாமனைத்தான்

தம்பிக்காக தியாக மெழுகுவத்தியாகும் அண்ணன்! - கிருஷ்ணபாபு - பாலைய்யா, மீனா, மந்த்ரா

படம்
  கிருஷ்ணபாபு பாலைய்யா, மந்த்ரா, அப்பாஸ்  இயக்கம் - முத்தியாலா சுப்பையா வசனம் - தொட்டபள்ளி மது  கதை - சாந்தி அட்டாலா பாலைய்யா பெரிய ஜமீன்தாரின் மகன், அவரின் அப்பா பெண்களின் சபலமான ஆள். இப்படி இருக்கும்போது அவர் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஜமீன்தாரின் அதிகாரப்பூர்வ முதல் மனைவியைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் தவறுதலாக மனைவிக்கு கொடுத்த விஷப்பாலை ஜமீன்தார் எடுத்து குடித்துவிட அவர் ரத்தவாந்தி எடுத்து பரலோக பிரவேசமாகிறார். இந்தப்பழி சிறுவனின் மீது சித்தியும் அவரது உறவினர்களும் போட சிறுவன் கிருஷ்ணபாபு சிறைக்கு செல்கிறான். அவனது அம்மா இந்த சோகம் தாங்காமல் இறந்துபோகிறார். இந்த நேரத்தில் கிருஷ்ணபாபுவின் தாய்மாமா தான் அனைத்து விஷயங்களையும் பார்த்து சொத்துக்களைப் பராமரிக்கிறார். கிருஷ்ணபாபு சிறையில் இருந்து வந்து என்ன செய்கிறார், தந்தை, தாய் இறப்புக்கு காரணமான சித்தி வகையறாக்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை.  படம் முழுக்க புத்திசாலித்தனமாக விஷயங்கள் என்பது கிளைமேக்ஸில் வரும் தம்பியைக் காப்பாற்றுவது மட்டுமே. வேறு எதுவும் கிடையாது. மற்றபடி தியாகம்