பொப்பிலி சிங்கம் டாடியாகும் உணர்ச்சிகரமான கதை! - பொப்பிலி சிம்ஹம் - பாலைய்யா, மீனா, ரோஜா

 








பொப்பிலி சிம்ஹம், 1994
பாலைய்யா, மீனா, ரோஜா

Story by: V. Vijayendra Prasad
Language: Telugu






சரத்பாபு, ஆற்றில் நடைபெறும் விபத்தில் சிறுவன் ஒருவனைக் காப்பாற்றுகிறார். அவன் அவருக்கு மாப்பிள்ளையாகும் முறை கொண்டவன. அவனை ஊர் தலைவராக்க முயல்கிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி எதிர்கொண்டார், இதை எதிர்க்கும்  மனிதர் அதே ஊரில் இருக்கிறார். 

பொப்பிலி என்ற ஊரின் தலைவர்தான் விஜய ராகவ பூபதி. அதாவது பாலைய்யா. பதவியில் அமர்வதற்கான நாளன்று ஊர் பெரிய மனிதரின் அதாவது முதன்மை வில்லனின் மகனை அடித்து துவைத்துதான்  நாற்காலியில் அமர்கிறார். ஊரில் நடக்கும் அத்தனை பிரச்னைகளையும் வழக்குகளையும் அவர்தான் தீர்த்து வைக்கிறார். ஊருக்கே பெரிய மனிதர், கறைபடாத நேர்மையான மனம்தான் அங்கு இருக்கவேண்டும். 

தாய்மாமன் சரத் பாபுவின் ஆதரவில்தான் விஜய் நாற்காலியில் அமர்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவரை எதிர்த்து நின்று ஊர் முன்னே செருப்பால் அடிக்கும் தண்டனையைக் கொடுக்க நேரிடுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிரச்னையாகிறது. இந்த விவகாரத்திற்கு முன்னரே தாய்மகன் மகள் லலிதா, முறை மாமனைத்தான் கட்டுவேன் என திருமண வெறியில் இருக்கிறாள். அப்பாவை செருப்பில் மூன்று முறை தனது முறைமாமன் அடித்தபிறகும் கூட அவனையே மணக்கிறாள். என்னடா இது வெட்க கேடு என நினைக்கும்போதுதான் கதையில் திருப்புமுனை நேரிடுகிறது. 

ஆனால் அவள் முதலிரவு நடக்க சம்மதிப்பதில்லை. காரணம், தனது தந்தையை அவமானப்படுத்தியது முக்கியக் காரணம் என சொல்லுகிறாள். உண்மையில் லலிதா அப்படி சொல்ல என்ன காரணம் என தெரிந்துகொள்ள இரண்டரை மணிநேரம் படம் பார்க்க வேண்டும். 

இது கூட படம் தொடங்கி தாமதமாக தெரிந்துகொள்ளும் கதைதான். அதற்கு முந்தைய காட்சி, மீனாவுக்கும் விஜய ராகவ பூபதிக்கும் நடைபெறுகிறது. மீனாவுக்கு யாரை திருமணம் செய்யலாம் என நினைக்கும் சமயத்தில் எதிரே வருவது, வேறு யார் பாலைய்யாதான். அவரை காதலிக்க பாலைய்யாவின் பாட்டியே வற்புறுத்துகிறார். இந்த நேரத்தில் அதற்கான சூழல் மீனாவின் இனக்குழுவே அதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர். மீனா, நிர்வாணமாக ஊரைச்சுற்றி வரும் சடங்கு ஒன்றை இனக்குழு பூசாரி பரிந்துரைக்கிறார். இதை மீனா மறுக்க, தள்ளுமுள்ள தொடங்குகிறது. 

பூசாரி சொன்னதை அவரை எதிர்த்து மீனா அம்மனின் கருவறையில் நிறைவேற்றுகிறார். அப்போது பூசாரியை எதிர்த்து பாலைய்யா பிளடி ஃபூல்ஸ் என வசனம் பேசுகிறார். ஆர்வத்தில் நிர்வாணமான நிலையில் கோவில் கருவறையைத் திறந்துவிட பாலைய்யா மீனாவைப் பார்த்துவிடுகிறார். அப்புறம் என்ன, பாத்துட்டான் பாத்துட்டான் என மீனா கையில் வாய் வைத்து அலறி பாலைய்யாவை கோவிலில் மணம் செய்துகொள்கிறார். அதற்குப் பிறகுதான் மீனா பாலைய்யாவின் வீட்டுக்கு வருகிறார். அங்குதான், அவருக்கு இன்னொரு திருப்புமுனை அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் முதல் மனைவியல்ல என்பதுதான் அது. பிறகு என்ன ஃபிளாஷ்பேக் தான். 

பாலைய்யா இன்னொரு கல்யாணம் செய்ய விடமாட்டேன் என்றும், பாலைய்யாவின் பாட்டி வம்சத்தை விருத்தி செய்ய இன்னொரு கல்யாணத்தை நானே ஏற்பாடு செய்வேன் என பந்தயம் வைத்துக்கொள்கிறார்கள். இதில் யார் வெல்கிறார் என்பதே கதை. 

--------------------------

எந்த தப்பு செய்தாலும் மூன்று செருப்படி என்பது எப்படி அநீதியை சீர் செய்யும் என புரியவில்லை. 

தாய்மாமனை ஊர்கூட்டி செருப்பில் அடித்த மாப்பிள்ளை பாலைய்யா, தனது தவறை உணர்ந்த பிறகு ஊர்மக்களே இல்லாத இரவு நேரத்தில் தன்னை சாட்டையால் அடித்துக்கொள்வது எப்படி நீதியாகும்?

ஊரின் தலைவராக இருந்துகொண்டு எப்படி இரு மணங்களை செய்கிறார் என்பது புரியவில்லை. யார் இறந்தாலும் வேறு குற்றங்கள் நடந்தாலும் நிதானமாக விசாரித்தால் தானே உண்மை தெரியும், அனைத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகும் விஜயராகவ பூபதி எப்படி தலைவராக தகுதி பெறுகிறார். அவர் பெறும் நிலக்கிழார். ஊர் மக்களில் பாதிப்பேர் அவரிடம் வேலை செய்கிறார்கள். சமூக சேவை நிறைய செய்கிறார் என்பதே முக்கிய தகுதியாகிறது?

---------------------------------------

ரோஜா பற்றிய உண்மையை ஒரே நேரத்தில் கோவிலில் ஒளிந்திருந்து அனைவரும் அறிவது டிவி சீரியல் காட்சி போல ஆகிவிட்டது..

குழந்தை பிறந்தால்தான் பெண்ணுக்கு பெருமை என பழங்கால தத்துவத்தை சொல்லும் படம் தான் இது. 

பொப்பிலி சிங்கம் அப்பா ஆகும் கதை

கோமாளிமேடை டீம் 

 











கருத்துகள்