கண்களைக் கவரும் வெப்ப நீரூற்று!

 










ஆளை மயக்கும் வண்ணத்தில் வெப்ப நீரூற்று! 
ஃபிளை கீசர்  (
Fly geyser)


அமெரிக்காவின் நெவடாவில் பிளாக் ராக் பாலைவனம் உள்ளது. அங்குதான் ஃபிளை கீசர் அமைந்துள்ளது. ஹூவாலாபெய் எனுமிடத்தில் உள்ள வெப்ப நீரூற்று இது. பூமியின் ஆழத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்த நீரூற்று உருவானது. மலைகளின் வினோதமான நிறம் நீரூற்றில் கலந்துள்ள கனிமம் மற்றும் சில தாவர இனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பாலைவனத்தில் முன்னர் ஏரி ஒன்று இருந்தது. தற்போது அது, வறண்ட ஏரிப்படுகையாக உள்ளது. 

நீரூற்றின் உயரம் 3.7 மீட்டர் ஆகும். இதிலிருந்து சூடான நீர் பீய்ச்சி அடிப்பதை பல கி.மீ. தொலைவிலிருந்தும் பார்க்கலாம். 1916ஆம் ஆண்டு மனிதர்கள் விவசாய நீர்தேவைக்காக நிலத்தை துளையிட, அதிலிருந்துதான் வெப்ப நீரூற்று வெளியாகத் தொடங்கியது. பிறகு இதற்கு நூறு அடி தள்ளி மற்றொரு இடத்தில் ஆய்வு நிறுவனம், நிலத்தில் துளையிட்டது.  அதிலும் வெப்பமான நீர் கிடைத்தது. ஆனால் அவர்கள் நினைத்தளவு வெப்பம் கிடைக்கவில்லை. இதன் வழியாக உருவானதுதான்  ஃபிளை கீசர். இதற்கு அடுத்து இங்கு 2006இல் இயற்கையான உருவான நீரூற்றின் பெயர், வில் கீசர்.  

சில நாட்களுக்கு ஒருமுறை வெப்ப நீரூற்று, சூடான நீரை வெளியே பீய்ச்சி அடித்து வருகிறது. நீரூற்றுக்கு கீழே எரிமலைக் குழம்பு உள்ளது. இதுவே நீரை சூடாக்கி வெளியே நீராவியோடு வெளித்தள்ளுகிறது. எரிமலை குழம்பு வெளியேறியபிறகு, நீர் மீண்டும் நிலத்திற்கு கீழே சென்றுவிடுகிறது. 

எரிமலைக் குழம்பு வெளித்தள்ளும் நீரில் கால்சியம் கார்பனேட், சிலிகா உள்ளது. இதுவே நீரூற்றின் கூம்பு வடிவத்தை உறுதியாக்குகிறது. சூடான நீரில் பச்சை மற்றும் சிவப்பு பாசி வாழ்கிறது. அதுவே நீரூற்றின் வினோதமான நிறச்சேர்மானங்களுக்கு காரணம். இப்பாசிகளை தெர்மோபிலிக் (Thermoohilic)என புவியியலாளர்கள் அழைக்கின்றனர். அதிக வெப்பம், ஈரமான சூழ்நிலையில் மட்டுமே வாழும் உயிரி இது. இதனை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.  

நீரூற்றிலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீரின் வெப்பநிலை, 93 டிகிரி செல்சியஸ்.  பிளாக் ராக் பாலைவனம் ஆண்டு முழுமைக்கும் வறண்டே காணப்படும். சில சமயங்களில் மழைப்பொழிவு கூடுதலாக இருந்தால் அதன் பரப்பில் நீர் தேங்கும். இந்த நீரில் , ஃபெய்ரி  ஷிரிம் (fairy shrimp)எனும் உயிரினம் தனது முட்டைகளை இடுகிறது. ஒளி ஊடுருவும் உடலுடன் 25 மி.மீ. அளவு கொண்ட உயிரினம் இது. இதன் முட்டைகளை உண்ண  பாலரோப்ஸ்(Palaropes), அமெரிக்க அவோசெட்(Avocet) ஆகிய பறவைகள் வருகின்றன. 


amazing earth book








 


கருத்துகள்