பெயர் அச்சிடுவதில் உருவான வெட்க கேடான அலுவலக அரசியல்! கடிதங்கள் - கதிரவன்

 













26.2.2022

மயிலாப்பூர்


அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

நான் இருவேளை வெளியிலும் ஒருவேளை அறையிலும் சமைத்து சாப்பிடுகிறேன். இதற்கு மட்டுமே நேரம் உள்ளது. இன்ஸ்டன்ட் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அத்தகைய உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜியை வெவ்வேறு பெயர்களில் சேர்க்கிறார்கள். வியாபாரம் என்றால் ஆறு பொய், நான்கு உண்மை சொல்வோம் என்பார்கள். இங்கு சொல்வது, அத்தனையும் பொய்யாக உள்ளது. 

மதிய வேளையில் மெல்ல வெயில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் கோ ஆர்டினேட்டர் பெயரை நாளிதழில் ஆசிரியர் போடவேயில்லை. 

ஆசிரியர் மீது காட்ட முடியாத கோபத்தை அவருக்கு அடுத்த இடத்தில் பெயர் உள்ள என்மீது கொட்டுகிறார்  கோ ஆர்டினேட்டர். புறணி பேசுவது, சாடை பேசுவது, வன்மத்துடன் பழி போடுவது என சபை நாகரிகம் இன்றி வசை பாடி வருகிறார். ஆனால் இப்படி வன்மத்தாக்குதல் நடப்பதை சக உதவி ஆசிரியர்கள் அமைதியாக பார்த்தனர். நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் எனக்கு நேரும் பிரச்னைகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்படி வசை பாடுவது பட்டம் இதழுக்கு புதிதல்ல. இதற்கான விஷ வித்துகளை ஊன்றியவர், நாளிதழை தொடங்கிய செய்தி ஆசிரியர் பதவியில் இருப்பவர். முடிந்தவரை தாக்குப்பிடிக்க பார்க்கிறேன். 

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது? பெற்றோர் நலமாக இருக்கிறார்களா? சுப்ரதோ பக்ஷி எழுதிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாரம் கார்ட்டூன் கதிரவன் வீட்டுக்குச் செல்ல நினைத்தேன். ஆனால் போக முடியவில்லை. இன்னொரு நாள் செல்லவேண்டும். 

நன்றி!

அன்பரசு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்