முகத்தில் தோன்றும் ஃபிரெக்கில்ஸ்!
ஃபிரெக்கில்ஸ்
சில பெண்களுக்கு அல்லது ஆண்களுக்கு முகத்தில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். பெரும்பாலும் வளரும்போது உருவாகும் ஒன்றுதான். குழந்தைகள் பிறக்கும்போது இதுபோன்ற புள்ளிகளோடு இருப்பதில்லை.
இதை ஆங்கிலத்தில் எப்ஹெலிடெஸ் என்று சொல்லுவார்கள். இப்படி புள்ளிகள் தோலில் கடினமான தன்மையில் இருக்காது. ஆனால் சொல்லும்போது, அப்படித்தான் நினைக்கத் தோன்றும். ஃபிரக்கில்ஸ் முகம், கழுத்து, தோள், மார்பு ஆகிய இடங்களில் உருவாகிறது.
சூரிய வெளிச்சம் படுபவர்களுக்குத்தான் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. இதில் புற ஊதா கதிர்களுக்கும் பங்கிருக்கிறது. மரபணு என்பது ஒருவரின் உடல்நிறம், முடியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அப்படியெனில் ஃபிரெக்கில்ஸ் என்பதும் இந்த வகையில் உருவாகுமா என்றால் உருவாக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். மற்றபடி இதை உறுதியாக கூறுவது கடினம்.
ஆசியா மற்றும் காகசிய நாடுகளில் எம்சி1ஆர் என்ற மரபணுவின் வேற்று உருவங்கள் காணப்படுகிறது. சூரியவெளிச்சம் பட்டு ஐந்து நாட்கள் கழித்து ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது. வெப்பத்தாக்குதல் காரணமாகவும் மெலனின் நிறமி சார்ந்தும் ஃபிரெக்கில்ஸ் உருவாகிறது.
https://www.allure.com/story/what-causes-freckles
கருத்துகள்
கருத்துரையிடுக