இடுகைகள்

விழுப்புரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூத்துக்கலைஞர்களை அடையாளப்படுத்தும் மருதம் கலைவிழா! - விழுப்புரத்தில் புதிய முயற்சி

படம்
  புதிய தலைமுறையினருக்கான மருதம் கலைவிழா பொங்கல் என்றால் பலருக்கும் தனியார் தொலைக்காட்சியில் போடும் சினிமாக்களைப் பார்ப்பதும், இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதிலும் பொழுது கழியும். அந்த நேரத்தில் விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்களை வரவைத்து மருதம் விழாவை இருநாட்கள் நடத்துகிறார் ஏ கார்த்திகேயன் என்ற சமூக செயல்பாட்டாளர். ‘’இன்று இளைஞர்கள் பொங்கல் போன்ற விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போனில் அல்லது டிவி முன்னே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவே 15-16 என இரு நாட்களில் நாங்கள் மருதம் விழாவை நடத்த தொடங்கினோம்’’ என்றார் கார்த்திகேயன். இவர் தனது இளம் வயதில் புரட்சிகர இயக்கங்களில் இயங்கி வந்தவர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் தெற்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்தக விற்பனை நிலையம் ஒன்று. கலைப்பொருட்களின் அரங்கு ஆகியவை இடம்பெற்றிருந்தது. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, பறை, தெருக்கூத்து ஆகியவற்றை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் நடத்துகிறார்கள். மருதம் விழாவில் சமூக செயல்பாட்டாளர்களை கௌரவிக்கும் பணியும் நடைபெறுகிறது. பச

விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

படம்
  இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள்.  பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள்.  விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர்.  இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்கு

சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

படம்
  பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன.  இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது.  பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர்.  பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன்.  முப்பது ஆண்டுகளாக தன