மலமிளக்கியால் தோல்நோய் தீராது!
மருந்து = நஞ்சு ஓமியோபதி ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது. இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்...