மலமிளக்கியால் தோல்நோய் தீராது!

 


 மருந்து = நஞ்சு
ஓமியோபதி

ஒவ்வாமைக்கான மருந்துகளாக தாய் திராவகம்(பத்து சொட்டுகள்), சிறிய இனிப்பு உருண்டைகள்(சாப்பிடும் முன்/பத்து உருண்டைகள்), சப்பி சாப்பிடும் மாத்திரைகள் ஆறு(மூன்று வேளைக்கு)சாப்பிட மருத்துவர் அறிவுறுத்தினார். இதில், சித்த மருத்துவம் போல பத்தியமும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை பிரச்னைக்கு இடையறாது மலமிளக்கி மருந்துகளை கொடுத்தனர். அடிப்படையில் தோல் நோய்களுக்கு மூல காரணம், மலம் குடலில் இருந்து வேகமாக வெளியேறாத காரணத்தால், அதிலுள்ள கிருமிகள் உடலில் புகுந்து நோய்களை உருவாக்குகின்றன. எனவே, மலமிளக்கி மருந்துகளை இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவிட்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு ஓடவேண்டியிருந்தது. அப்படி ஓடாவிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எப்படி ஒருவித உணர்வு தோன்றுகிறது. அதேவித கழிந்துவிடும் உணர்வு மருந்தால் உருவாக்கப்பட்டது.

இதேபோல ஓமியோபதியிலும் வெளிக்குப்போக மருந்துகள் உண்டு. ஆனால், அவை திருகலானவை. அவற்றைத் தின்றால் எதற்கு அதை தின்றோம் என யோசிக்கவைப்பவை. ஓமியோபதியில், மலமிளக்கி மருந்துகளை கொடுப்பதை சாமுவேல் எதிர்க்கிறார். நோயை என்னவென்று முழுமையாக ஆராய்ந்தபிறகே மருந்துகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைக்கு ஓமியோபதியில் மருந்துகளைக் கண்டுபிடிக்க மென்பொருட்களை, வலைத்தளங்களைக் கூட மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தளவு அந்த மருத்துவம் வளர்ந்துவிட்டது.

ஓமியோபதியில் சாப்பிட்ட மருந்துகளில் நேரடி விளைவு ஒவ்வாமையை ஒத்த செயற்கை நோயை ஏற்படுத்தியது. அதேபோல உபரியாக, கை, கால்களில் மரத்துப்போன தன்மை ஏற்படத்தொடங்கிவிட்டது. அந்த உணர்வு இன்று வரைக்கும் உள்ளது. நண்பர்களே, ஓமியோபதி மருந்தை அவசரப்பட்டு சாப்பிடுவது நல்லதல்ல. அதை சிறந்த மருத்துவர் அல்ல நல்ல மருத்துவரை அடையாளம் கண்டு அவரின் பரிந்துரை கீழ் வாங்கி சாப்பிடுங்கள். அவர்கள்தான் அக்கறையாக பக்க விளைவுகள் அதை எப்படி எதிர்கொள்வது என்றாவது கூறுவார்கள். அடிப்படையில் உலகமே வணிகமயமாகிவிட்டது. வயிற்றுப்பிழைப்புக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு மனிதர்கள் வந்துவிட்டார்கள். இதில் ஓமியோபதி மருத்துவர்களும் விதிவிலக்கு கிடையாது.

எந்த மருத்துவமுறையை எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள மருந்துகள் எதைக்கொண்டு தயாரிக்கப்பட்டாலும் சரி. அதில் பக்கவிளைவுகள் உண்டு. நேரடி விளைவாக நோய் தீர்க்கிறது. அடிப்படையில் நாம் பிறக்கும்போது, நம் உடலில் ஆன்ம சக்தி உள்ளது. இதை ஆயுள் சக்தி என்று கூட கூறலாம். ஒவ்வொருமுறை நோய் வரும்போதும், அதை எதிர்த்து போராடும்போது ஆயுள் சக்தி குறைகிறது. நோய் வந்த உறுப்புகள் திரும்ப இயங்கினாலும் கூட அதன் செயல்திறன் முன்னைப்போல இருக்காது. காரணம், நோய் காரணமாக அதன் சக்தி குறைந்துவிடும். மதுசாரம், சர்க்கரை சாரம் என எப்படி மாத்திரைகளை பக்குவப்படுத்தி வீரியமாக சாப்பிட்டாலும் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே மருந்துகள் வேலை செய்யும்.

கோட்பாடுகள் முடிந்துவிட்டது. இப்போது மருந்துகளைப் பார்ப்போம்.

ஹைபெரியம் பர்ஃபாராட்டம்
செயின்ட் ஜான் வோர்ட் என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தாய் திராவகம். எங்கேனும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டால், தசைகளில் வலி, குழிப்புண்கள் ஏற்பட்டால், நரம்புகளின் முடிச்சுகளில் வலி, மரத்துப்போன தன்மை ஆகியவற்றுக்கு ஹைபெரியம் பர்ஃபாராட்டம் மருந்தை பயன்படுத்தலாம்.

பொதுவாக அடிபட்டவர் அதிர்ச்சியுடன் இருந்தால் அவருக்கு ஆர்னிகாவும், சிராய்ப்புகள், காயங்கள் இருந்தால் ஹைபெரியம், குழிப்புண்கள் தீவிரமாக இருந்தால் அதற்கு லேடம் ஆகிய மருந்துகளை பயன்படுத்தலாம். நோயாளியின் அறிகுறிகளை தீவிரமாக கவனிப்பது இதில் முக்கியம்.

ஐபெக் அக்குவான்கா

செபாலிஸ் ஐபெக் அக்குவான்கா என்ற தாவரத்தின் வேரில் இருந்து தாய் திராவகம் தயாரிக்கப்படுகிறது. செரிமான அமைப்பு, மூச்சுவிடுதல் ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டால், ஐபெக் மருந்தை பயன்படுத்தலாம். குமட்டல், வாந்தி, எரிச்சல், அதிகமாக உணவு உண்பதால் ஏற்படும் அசௌகரிய உணர்வு, ஈரமான வெப்பமான காற்று பட்டால் குமட்டல் உருவாவது, வாகனங்களி்ல போகும்போது ஏற்படும் வாந்தி, மூக்கில் ரத்தம் கொட்டுதல், அதீத எச்சில்சுரப்பு என அறிகுறிகள் தெரிந்தால் ஐபெக் மருந்தை சாப்பிடலாம்.

லேடும் பாலுஸ்ட்ரி
வைல்ட் ரோஸ்மேரி என லேடும் பாலுன்ஸ்ட்ரியை கூறுகிறார்கள். பூச்சிக்கடி, கண்களுக்கு கீழே கருப்பு வளையங்கள் இருப்பது, குழிக்காயங்கள், உடல் உறுப்புகள் செயலிழப்பு ஆகியவற்றுக்கு மருந்தாக வழங்கலாம்.

லைகோபோடியம் கிளாவாடும்
ஓநாயின் கால் போன்ற சாயல் கொண்ட தாவரம். இதன் மகரந்தம் கொண்டு மருந்து தயாரிக்கிறார்கள். சிலருக்கு நன்றாக பசிக்கும். ஆனால், சிறிது சாப்பிட்டவுடனே பசி தீர்ந்துவிடும். சாப்பிட்டபிறகு வரும் ஏப்பத்தில் அமிலத்தன்மை இருக்கும். வெங்காயம், பிரெட், ஒயின் ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்வது, பயம், பதற்றம் ஆகியவை நோய்களை உருவாக்கும். வயிறு, சிறுநீரகம் தொடர்பான நோய்களை லைகோபோடியம் தீர்க்கிறது. கூடுதலாக, காது வலி, காய்ச்சல், தொண்டை வறட்சி, அஜீரணம், மூச்சுக்குழல் அழற்சி ஆகிய பிரச்னைகளுக்கும் பயன் அளிக்கிறது.

மெரிகுரியஸ் சொல்யுபிலிஸ்

குளிர், ஈரப்பதமான காலநிலை, காலிலுள்ள வியர்வையை வெளியேற்றாமல் இருப்பது ஆகியவை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. நோயாளி இரவில் தூங்கும்போது வியர்வை பூக்கும். எச்சில் அதிகமாக சுரக்கும். குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார். வாயில் எச்சில் உலோக சுவையைக் கொண்டிருக்கும். வயிற்றுப்போக்கு, இன்ப்யூயன்சா, பல்வலி, டான்சில்ஸ், வாயில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றுக்கு மெரிகுரியஸ் மருந்து சிறப்பாக பயன்படுகிறது.

mericuris solubilis,lycopodium clavatum



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்