மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை

 

 




 

 

 

 3

விஷம் = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை

ஓமியோபதி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் முன்னர், நோயாளிகளிடம் நிறைய பேசவேண்டும். சிலர் தங்களின் செயல்பாடுகளைக் கூறுவார்கள். சிலர் கூற மாட்டார்கள்.ஒருவரின் செயல்பாடுகள், குணங்கள் தெரிந்தால் ஓமியோபதியில் மருந்துகளைக் கொடுப்பது எளிது. தொடக்கத்தில் மருத்துவ அட்டவணை உதவியது. இன்று கணினியில் மென்பொருட்களை பயன்படுத்தி மருந்துகளை வழங்குகிறார்கள். நவீன காலத்தில் மருந்துகள் கூடிவிட்டன. ஓமியோபதியை பயிலும் மாணவர்களும், அதை பயிற்சி செய்பவர்களும் கூட தொடர்ச்சியாக பயின்றுகொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுதான் நோயாளிகளுக்கு நல்லதும் கூட.

அரசு மருத்துவமனைகளுக்கு வட இந்தியா, தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளத்தில் அரசு கூட்டுறவு ஓமியோபதி நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை தமிழ்நாடு அரசின் டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வருகிறது. ஓமியோபதி மருந்துகள் எந்தளவு தூய்மையாக உள்ளனவோ, அந்தளவு வீரியம் அதிகமாக இருக்கும். தனியார் மருந்துகடைகளில் ஓமியோபதி மருந்துகளை அதிக வீரியத்தில் வாங்கும்போது விலையும் கூடுதலாக இருக்கும். இத்தொழிலில் ஜெர்மனி நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அவற்றின் கிளை, வட இந்தியாவில் அமைந்துள்ளது.

நோய்களுக்கு மருந்துகளை எப்படி கொடுப்பது என்பதை அறிய மெட்டீரியா மெடிகா என்ற மருந்துகளின் அட்டவணை உதவுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் சென்று பார்த்தால், ஏராளமான ஓமியோபதி நூல்கள் கிடைக்கும். அவற்றை நீங்கள் வாசித்து ஓரளவுக்கு தெளிவு பெறலாம். நீங்கள் ஓமியோபதி மருந்துகளை நோய்களுக்கு பயன்படுத்த நினைத்தால், நூல்களை படித்து சற்று தெளிவடைந்துகொள்வது நல்லது. நூல்கள் தமிழ், ஆங்கிலத்தில் உண்டு. இவற்றை படிக்காமலும், மருத்துவர் சரியான தெளிவை அளிக்கவில்லையென்றால் ஏற்படும் பக்கவிளைவுகளை ஒருவர் எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

ஓமியோபதி மருந்துகளில் பலவும் உளவியல் நோய்களைத் தீர்க்க உதவுகின்றன. அவற்றை தீர்த்தாலே உடலிலுள்ள நோய்கள் பெரும்பாலும் குணமாகிவிடுகின்றன. உடலில் தீவிரமாக நோய் ஏற்பட்டால், அதற்கு ஓமியோபதி மருந்துகளை அரைமணி நேரத்திற்கு ஒரு முறை என அளிக்கவேண்டும். மருந்துகளை அடிக்கடி மாற்றக்கூடாது. முறையான ஓமியோபதி மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும், கமிஷன் மருத்துவர்கள் வேண்டாம். உண்மையாகவே அர்ப்பணிப்பாக வேலை செய்யும் மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்களை கண்டுபிடிக்கவேண்டும். அப்போதுதான் நோயும் தீரும். பக்கவிளைவுகளும் மட்டுப்படும். காசும் குறைவாக செலவாகும்.
இப்போது சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

Remedy Name    Abbreviations
ACONITUM NAPELLUS    Aconite, Acon
AETHUSA CYNAPIUM    Aeth
ALLIUM CEPA    All c
ANTIMONIUM TARTARICUM    Ant tart, Ant t
APIS MELLIFICA    Apis mel, Apis
ARNICA MONTANA    Arnica, Arn
ARSENICUM ALBUM    Ars, Ars alb


எடுத்துக்காட்டில் முதலில் உள்ள அகோனிடம் நாபெல்லஸ் என்ற மருந்தைப் பார்ப்போம்.

மாங்க்ஸ்ஹூட் என தாவரத்தில் இருந்து அகோனிடம் நாபெல்லஸ் மருந்து பெறப்படுகிறது. நேரடியாக இந்த மருந்தை பயன்படுத்தினால், கடுமையான விஷம். எந்தளவுக்கு உடல் உறுப்புகளை செயலிழக்க செய்யும் அளவுக்கு. ஓமியோபதியில் விஷத்தை மருந்தாக மாற்றி குணமாக்குமாறு செய்கிறார்கள்.

நோயாளிக்கு பயம், பதற்றம், வலி, வேதனை இருந்தால் அகோனிடம் தாய் திராவகத்தை பயன்படுத்தலாம். காய்ச்சல், கண் இமைகள் சிவப்பு நிறத்தில் இருப்பது, தாகமாக இருப்பது ஆகியவற்றுக்கு அகோனிடம் மருந்தை பயன்படுத்தலாம். ஆர்னிகாவும் பயன்தருவதுதான். வெயில் அதிகம் அலைந்து நீர்ச்சுருக்கம் ஏற்படுவது, அதிர்ச்சியான மனநிலை, மூக்கில் ரத்தம் கொட்டும் சூழல் என்ற சூழலில் அகோனிடம் பயன்படுத்தலாம். நோயாளி காற்றோட்டமான சூழலில் படுக்கவைக்கப்படவேண்டும்.

அறிகுறிகளைப் பொறுத்து அகோனைட், ஹெபர் சல்ப், ஸ்பாஞ்சியா ஆகிய மருந்துகளைக் கொடுக்கலாம்.
ஆதுசா சைனாபியம்
செரிமான பிரச்னைகளுக்கான மருந்தாக பயன்படுகிறது. அதற்காக இதை செடியில் இருந்து அப்படியே அரைத்துக் குடித்தால் வாந்தி, வயிற்றில் எரிச்சல் உண்டாகும். பூவிட்ட செடியில் இருந்து சாறு எடுத்து தாய் திராவகத்தை தயாரிக்கிறார்கள். மருந்துக்கு முழு செடியுமே பயன்படுகிறது.

குழந்தைகள், அதிக வெப்பநிலை உள்ள நிலப்பரப்பில் பாலை குடித்துவிட்டு தயிர் போன்ற நிலையில் அதை வாந்தி எடுக்கும். வாந்தி எடுத்த உடல் அயர்ச்சி காரணமாக தூங்கத் தொடங்கும். பாலுக்கு எதிரான சகிப்பின்மை என பலர் புரிந்துகொள்வார்கள். செரிமானத்தில் ஏற்பட்ட கோளாறு என்பதே சரியான புரிதல். இதற்கான மருந்தாக, ஆசுசா சைனாபியத்தை பரிந்துரைக்கலாம். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்