வன்முறைப் போராட்டத்திற்கான மூல காரணம்!

 

 

 

வன்முறையைக் கொண்டாடும் திரைப்படங்கள் உலகமெங்கும் உண்டு. ஆங்கிலத்தில் வந்த திரைப்படங்களை அடியொற்றி இப்போது இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட அத்தகைய படங்களை உள்ளூர் மொழிகளில் உருவாக்குகிறார்கள். பழிவாங்குவதை, தங்கத்தின் மீது கொண்ட பேராசையை தாயின் கனவு, அண்ணனின் லட்சியம், தம்பியின் வாழ்க்கை என ஏதோ கதை சொல்லி கோடரி, கத்தி, வாள், துப்பாக்கி என பயன்படுத்தி ரத்தம் தெறிக்க கொல்கிறார்கள். இதில் புராண கோட்டிங் அடித்து தாழ்த்தப்பட்ட மனிதர்களைக் கொன்று அவர்கள் மீது சிறுநீர் கழிப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில்லை. பார்ப்பனன் தொந்தி வைத்துக்கொண்டு விளையாட்டை விளையாடுகிறான் என்பதை எதிர்க்கட்சிக்காரர் கூறிவிட்டார் என அதை ஊடகங்கள் ஊதிவிட்டு வெறுப்பை வளர்த்து வருகின்றன. இங்கு இறப்பவன் யார், அவனுக்கு சமூகத்தில் என்ன அந்தஸ்து, என்ன மதத்தைக் கடைபிடிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்தே அவன் சாவுக்கான சமதர்ம நீதி தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான நிலப்பரப்பில் நாம் வன்முறையை கையில் எடுப்பதைப் பற்றி பேசுகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனன், அவனுடைய ஆதரவு பெற்ற பொறுக்கித்தின்னும் இடைநிலை சாதிக்கூட்டம் வன்முறையைக் கையில் எடுத்தால், அது இயல்பானது. இவர்களிடமிருந்து உயிரை, உடைமையைக் காக்க தாழ்த்தப்பட்டவன் கையில் கழியை எடுத்தால் கூட தேசவிரோதி, தீவிரவாதி, நக்சலைட் என விமர்சிக்கப்படுவான். விலை குறைந்த வாங்க முடிகிற இறைச்சியை வாங்கித் தின்னக்கூட ஊரில் உள்ள பார்ப்பானின் அனுமதி பெற வேண்டியுள்ள நிலை வந்துவிட்டது. அனுமதி பெறாதபோது, எந்த இடத்திலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட முடியும். யாரும் அதைக் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள். வீடு, வேலை பார்த்த கடை என அனைத்தும் புல்டோசரால் இடித்து தகர்க்கப்படும். இப்படியாக ஒருங்கிணைக்கப்பட்ட அரச வன்முறையை யார் தட்டிக் கேட்பது, நீதிபதிகளும் வலதுசாரி மதவாத தாய்சங்கத்தில் இருந்தே நியமிக்கப்படும்போது நீதி என்பதே அவல நகைச்சுவையாக மாறிவிடுகிறது.

சிந்தனையாளர் ராபர்ட் வோல்ஃப், அதை அரசியல் தன்மை கொண்டதாக வரையறுக்கிறார். பிறர் மீது சட்டவிரோதமாக, அதிகாரப்பூர்வமற்ற வகையில் அதிகாரத்தை பயன்படுத்துவது என்று குறிப்பிடுகிறார். அரசியல் வன்முறையைக் குறிப்பிட்ட காரணம் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். அப்படியான அவசியமான காரணங்கள் இல்லாதபோது கருப்பின அமைப்புகள், மாணவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடாது அறிவுறுத்துகிறார். ராபர்ட் சட்டரீதியான வலுக்கட்டாய செயலை எதிர்க்கவில்லை. அதாவது, அரசு மக்கள் மீது செலுத்தும் அதிகாரத்தை, குறிப்பிட்ட காரண காரியத்தோடு சட்டப்பூர்வம் என ஏற்கிறார்.

இதில் சிக்கலான விஷயங்கள் உண்டு. உடல் ரீதியாக ஒருவரை வற்புறுத்துவது வன்முறை என்ற காரணத்தில் வருகிறது. இதில் உணர்வுரீதியாக ஒருவரை சுரண்டுவது வன்முறை என்று ராபர்ட் கூறவில்லை. வலுக்கட்டாயத்தை சட்டப்பூர்வமாக அரசு செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது? அதற்கு மக்கள் எப்படியான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்? வன்முறை என்பது ஒருவரை நேரடியாக அல்லது மறைமுகமாகவும் பாதிக்கலாம். நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு எதிரான அதை அழிக்கும் அழிவு இயல்பைக் கொண்டது அரசியல் வன்முறை. சட்டம் என்பதை ஆட்சியில் உள்ள குறிப்பிட்ட கருத்தியலை அடிப்படையாக கொண்ட அரசு என கொள்ளலாம்.

அடிப்படைவாத அரசுகள், காவல்துறை, ராணுவம் மூலம் வன்முறையை கையில் எடுத்து மக்களின் உரிமைகளை பறிக்கிறார்கள். அதுவரை அடைந்த சமூக மாற்றங்களைக் கூட தடுக்க முயல்கிறார்கள். என்ன ஜனநாயகம் பேசினாலும் அதிகாரம், பலம் என்பதுதான் அனைவரின் அடிப்படை ஆதாரசக்தி. இஸ்ரேல் இனவாத படுகொலைகளை செய்யும்போது, அதை தடுக்க வன்முறையை பாலஸ்தீன அமைப்புகள் கையில் எடுப்பதை முற்றிலும் தவறு என்று கூறிவிடமுடியாது. அதை அங்குள்ள சூழல்தான் தீர்மானிக்கும். இனவாத அரசை உலக நாடுகள் ஆதரிக்கிறது என்றால் அதற்கென தனித்துவமான லாபக்கணக்குகள் இருக்கும். மனிதர்கள் இறப்பது, வீடுகள் இடிபாடு என்பதெல்லாம் வெறும் செய்திகளைப் போலத்தான் வியாபாரிகளுக்குத் தெரியும். வியாபாரிகள் ஆட்சியாளர்களாக மாறும்போது மக்களுக்கு நன்மையை விட பேரிடர்களே ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வன்முறை அமைப்பு ரீதியாக நடத்தப்படுகிறது. அல்லது அரசின் ஆதரவு பெற்ற குண்டர்களால் பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்படுகிறது. தனிநபர்களால் நடத்தப்படும் வன்முறையானது, முன்பு இருந்த அதிகார படிநிலை அல்லது சமூகநிலையை நடைமுறையில் கொண்டு வர உதவுகிறது. வன்முறை மூலம் சிறுபான்மையினரை, பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்களை தங்களுக்கு கீழே அடிமையாக வைத்து சுரண்ட முயல்கிறார்கள். அடிப்படைவாத அரசு தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள இத்தகைய கீழ்த்தரமான காரியங்களை செய்கிறது. தேவைப்படும்போது கைக்கூலி ஊடகங்களை பயன்படுத்தி அதை நாசூக்காக நியாயப்படுத்தவும் முயல்கிறது. குறுஞ்செய்தி நிறுவனங்களும் காசு வாங்கிக்கொண்டு போலிச்செய்தியை, பொய்களை மக்கள் சிந்திக்க முடியாதபடி வேகமாக பரப்புகின்றன.

இன்றைக்கு வன்முறையை காவல்துறையினர், போராட்டக்காரர்கள் கையாளும் வழிமுறை மாறியுள்ளது. பெண்கள் போராடினால், அவர்களை மானபங்கம் செய்யும் வகையில் போலீசார் நடந்துகொண்டு போராட்டங்களை கலைப்பது புதிய பாணியாக நடைபெறுகிறது. இதில், நகைமுரண் என்னவென்றால், நடைபெறும் போராட்டமே வலதுசாதி மதவாத கட்சித்தலைவர் விளையாட்டு வீராங்கனைகளை வல்லுறவு செய்தார் என்பதுதான். ஆக, காவல்துறையினரும் தங்கள் பங்கிற்கு பெண்களை தொட்டு தடவி உச்சம் அடைகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். இப்படியான பொறுக்கிகள், காலிப்பயல்கள் உள்ள நாட்டில் வன்முறையை விட சிறந்த தீர்வு என்னவாக இருக்கமுடியும்?
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்