முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு!

 

 


 

அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி


முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு?

அமெரிக்கா. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று டிரோஸ் 1 என்ற தட்பவெப்பநிலை செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிடைத்த புகைப்படங்கள் அந்தளவு துல்லியமாக இல்லை. ஆனால், மேகங்கள், புயல்களைப் பற்றிய படங்கள் கிடைத்தன. மொத்தம் எழுபத்தேழு நாட்கள் மட்டுமே செயற்கைக்கோள் இயங்கியது. பிறகு, ஏற்பட்ட மின் விபத்தால் செயலிழந்துபோனது. தட்பவெப்பநிலை பற்றிய முதல் செய்தி லண்டனின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. ஆண்டு 1850. தட்பவெப்பநிலை பற்றிய ஒளிப்பரப்பு, விஸ்கான்சின் பல்கலைக்கழக நிலையத்தில் இருந்து 1921ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது.

பாரோமீட்டரை கண்டுபிடித்தது யார்?
கிரேக்க வார்த்தையிலிருந்து பாரோமீட்டர் வார்த்தை வந்தது. இதன் பொருள், எடை. ராபர்ட் பாயல் என்பவர், பாரோமீட்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாயல் பாரோமீட்டரின் வடிவத்தை மாற்றி அமைத்தார். ராபர்ட் ஹூக் என்பவர், எளிதாக அதன் டயலை பார்க்கும்படி அதை மேலும் மேம்படுத்தினார்.

1644ஆம் ஆண்டு பாரோமீட்டரை இவாங்கெலிஸ்டா டோரிசெல்லி என்பவர் கண்டுபிடித்தார். இவர் கலிலியோ கலிலியின் மாணவராக இருந்தவர்.பாரோமீட்டர் காற்று அழுத்தத்தை அளக்க பயன்படுகிறது.

தட்பவெப்பநிலையை மரங்கள் மூலம் கணிக்கலாமா?

நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்படும் முன்னர் விவசாயிகள் வேளாண்மையை இப்படித்தான் செய்தனர். எனவே இதை போலி அறிவியல் என்று கூறமுடியாது. நவீன காலத்தில் காலநிலை மாற்றம் உருவாகிவிட்டதால், மரங்களைப் பார்த்து எதையும் கணிப்பது கடினம். ஆனால் அன்று மேப்பிள் மரத்தில் இலைகளைப் பார்த்து மழை வருமா இல்லையா என விவசாயிகளால் கூற முடிந்தது. இதைப்போல டிரிச்சிலியா, கோரல் ஆகிய மரங்களும் காலநிலையை கணிக்க உதவின. இது சற்று தொன்மையானமுறை.

பெட்ரோலஜி என்றால் என்ன?
பாறைகளைப் பற்றிய அறிவியலுக்கு பெட்ரோலஜி என்று பெயர். மாணவர்கள், பாறை, அதன் வரலாறு, அதிலுள்ள கனிமங்கள் பற்றியெல்லாம் ஆய்வு செய்வார்கள். பாறை என்பது பல்வேறு கனிமங்கள் சேர்ந்த கலவை எனலாம். கனிமம் என்பதற்கு அதன் வேதி அமைப்பு எப்போதும் மாறாமல் இருக்கும். உயிரற்ற பொருட்களிலிருந்து பெறப்படுவது, இயற்கையில் இருந்து பெறப்படுவது என சில காரணங்களைக் கூறுகிறார்கள்.

படிமங்கள் எப்படி உருவாகின்றன?

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் பேரிடர்களால் அழிந்தால் பாறைகளில் படிமங்களாக எஞ்சுவதுண்டு. அதை வைத்துத்தான் இன்று புதிய நாகரிகங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. விலங்குகளின் எலும்பு, பற்கள், அதன் தலை எலும்புகள் பாறைகளில் எஞ்சுகின்றன. தாவரங்களைப் பொறுத்தவரை அதன் இலைகள், விதைகள், பாகங்கள் மிஞ்சக்கூடும். விலங்குகளைப் பொறுத்தவரை எலும்புகள் மிஞ்சும்.

சின்னபார் என்றால் என்ன?
பாதரசத்தில் இருந்து கிடைக்கும் முக்கியமான தாது. சிவப்பு நிறத்தில் இருக்கும். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கிடைக்கிறது. குறிப்பாக டெக்ஸாஸ், அர்கனாஸ், கலிபோர்னியா. ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் பெறப்படுகிறது. நிறமியாக உதவுகிறது.

நன்றி
ஹேண்டி சயின்ஸ் புக்





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்