இடுகைகள்

சிறுமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

26 ஆண்டுகால மர்மம் - சிறுமி ஜோன்பென்னட்டை கொன்றது யார்?

படம்
  ஜோன்பென்னட் கல்லறை ஜோன் பென்னட்டின் குடும்பம் குற்றவாளியைக் கண்டறிய முடியாத ஆறுவயது சிறுமியின் கொலை வழக்கு! 1996ஆம் ஆண்டு. அமெரிக்காவின் பௌல்டர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. மொத்த நாடுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தது. கொலராடோ பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் என அனைவருமே விழா கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி அலைகழிக்கப்படும் என அவர்கள் அறியவில்லை. அடுத்தநாள் காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. ஆறு வயது சிறுமி, அவளது வீட்டின் கீழ்தளத்தில் இறந்து கிடக்கிறாள் என்று. அதிகாரிகள் உடனே ரோந்து வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போனபோது இறந்துபோன சிறுமியின் பெயர் ஜோன்பெனட் ராம்ஸே என தெரிய வந்தது. அப்பாவித்தனமும், மலர்ந்த புன்னகையுமாக பேரழகியாக வளர்ந்து வரும் சாத்தியங்கள் கொண்டவள். அவள் வீட்டிலேயே அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு கிடந்தாள்.   சிறுமியின் அம்மா, பாட்ஸி, அழகுப்போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். இவரது கணவர் ஜான் ராம்ஸே கணினி பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜானுக்கு, பாட்ஸி இரண்டாவது மனை

குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

படம்
  400 டேஸ்  சேட்டன் பகத் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை.  பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது).  கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா.  கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்

வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

படம்
  கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட் ஜென்னி பியர்சன் ஓவியம் டேவிட் ஓ கானல் அஸ்பார்ன் புக்ஸ் ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை.  ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட் கேரி பால்சன் மேக்மில்லன்  பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை.  கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ்  சாம் கோப்லேண்ட் ஓவியம், சாரா ஹோம் கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க்கிறாள். இந்த சக்தியை வை

சிறுவயது தோழிக்காக ஆளுமை பிறழ்வில் சிக்கிக்கொள்ளும் தொழிலதிபர்! கில் மீ, ஹீல் மீ - கொரிய டிவி தொடர்

படம்
            கில் மீ ஹீல் மீ கொரியத் தொடர் யூட்யூப் டாக்டர் சா தொடருக்கு பிறகு லீ சங் நடித்துள்ள தொடர் இது . மனிதர் எப்படி சவாலான கதைகளை தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை . இத்தனைக்கும் டிவி தொடருக்கு ஆறு பாத்திரங்களாக மாறி நடிக்கவேண்டுமென்றால் எவ்வளவு கஷ்டம் ? எதையு்ம் முகத்தில் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டு முழுத்தொடரையும் பார்க்க வைப்பது லீ சங்தான் . சிறுவயதில் குழந்தைகளை துன்புறுத்தினால் அந்த பாதிப்பு அவர்களின் உளவியலை எப்படி பாதிக்கிறது என்பதை செய்தியாக சொன்னதற்கு உண்மையாகவே இயக்குநரை பாராட்டவேண்டும் . பாலியல் ரீதியான குழந்தையை கொடுமை செய்யும்படி காட்சிகள் இல்லையென்பது ஆறுதல் சியூஜின் என்ற நிறுவனத்தின் அடுத்த தலைவராகப் போகும் ஒருவர் , சா டியூ ஹியூன் . இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட மோசமான சம்பவம் ஒன்றால் ஆளுமை பிறழ்வு கொண்டவராக இருக்கிறார் . இதனை ஆங்கிலத்தில் முதலில் மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று சொன்னார்கள் . இப்போது அதனை டிஸ் அசோசியேட்டிவ் ஐடென்டிட்டி டிஸார்டர் என்று கூறுகின்றனர் . அமெரிக்காவில் இருந்து படித்துவிட்டு திரு