பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

 



அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன?

சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது. 

பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா?

அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை திருப்பல்கள், சாதுரியமான தந்திரங்கள், சூழ்ச்சிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

பெடோபிலியா என்றால் என்ன?

சிலர், பலவீனமாக உள்ள சிறுவர்களைக் கண்டால் பாலுறவு உச்சத்தை அடைவார்கள். எனவே, அவர்களை பாலியல் உறவுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். இதெல்லாம் மனநிலையாக ஏற்படுவது. அதாவது உளவியல் குறைபாடு. இதற்கு சிகிச்சை பெறமுடியும். வயது வந்தோர் மீது பாலியல் இச்சை கொள்ளும் ஹெபாபிலே என்ற சிக்கலும் உள்ளது. மூளை பாதிப்பு, சமூக ரீதியான புழக்கம் குறைந்தவர்கள், முன்னரே குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டியவர்கள் ஆகியோர் இதுபோன்ற விவகாரங்களில் துணிகிறார்கள். 

பாலியல் சுரண்டலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி கண்டுபிடிப்பது?

அறிகுறிகளை வைத்துத்தான். பெரும்பாலான சிறுவர்கள், சிறுமிகளுக்கு தனக்கு என்ன நேரிட்டது என்று தெரியாது. குழப்பத்துடனும், பயத்துடனும் இருப்பார்கள். பயம், பதற்றம், யாருடனும் பழகாமல் இருப்பது, மன அழுத்தம், தன்னம்பிக்கை இன்மை, தூக்கம் இன்மை ஆகியவை முக்கியமான அறிகுறிகள். அடிப்படையில் பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது முக்கியம். அப்போதுதான் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள், என்ன நடந்தது, சம்பவங்கள் அவர்களை எப்படி பாதித்தது என புரிந்துகொள்ள முடியும். 

குடும்ப வன்முறை என்றால் என்ன?

திருமண உறவை அடிப்படையாக கொண்டால் ஆண், பெண்ணை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துகிறார். அடித்து உதைப்பது, எலும்புகளை முறிப்பது, சூடு வைப்பது, அடைத்து வைப்பது, பட்டினி போடுவது என சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற பாகுபாடான செயல்பாடுகளை ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட சமூகம் இயல்பாக்கி வருகிறது. பார்ப்பன ஊடகங்கள் இதை ஆதரித்து பேசி சாதிமுறையை உறுதியாக்குகின்றன. பொதுவாக ஒன்றாக வாழும் ஆண்/ பெண்ணுக்கும், ஒரே பாலினத்தவர்களுக்கும் குடும்ப வன்முறை பொருந்தும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!