ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா?

 science questions and answers
mr.roni



ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா?

உளவியலாளர் ஜூடித் ஹெர்மன், 1992ஆம் ஆண்டு ட்ராமா அண்ட் ரெக்கவரி என்ற நூலை எழுதினார். இந்த நூலில் மூளைச்சலவை செய்வது பற்றி விளக்கி எழுதியுள்ளார். முரட்டு சங்கிகள், முட்டாள் சங்கிகள் தெலுங்கில் இந்துத்துவ படங்கள் எடுப்பதை பார்த்து வருகிறோம். எதையும் ஆராயாமல் முரட்டு முட்டாள்தனத்ததை எப்படி செய்வது என நூலில் கூறப்பட்டுள்ளது. இது வெறும் கோட்பாடு மட்டுமல்ல. பல்வேறு மத வழிபாடுகளைக் கொண்ட கல்ட்டுகள், சிறைச்சாலை கைதிகளுக்கு இப்படியான மூளைச்சலவை வேலைகளை செய்வார்கள். அடிப்படையில் ஒருவரின் முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி தன்மதிப்பை இழக்கச் செய்தல்தான் முக்கியப் பணி. இடையறாது ஒருவரை உடல், மனம் என இரண்டிலும் வதைத்து சித்திரவதை செய்தல் அவசியம். அப்போது ஒருவரின் தன்மதிப்பு குன்றி, அதுவரை தான் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக இயங்கத் தொடங்குவார். அதுதான் வெற்றி. மத அடிப்படைவாதிகள் இப்படித்தான் வெல்கிறார்கள். ஒருவர் உண்மை, ஆராய்ச்சி என்று பேசினால் மதவாதிகள் வன்முறையை கையில் எடுத்து எதிரிகளின் முதுகெலும்பை உடைக்க முயல்வார்கள். தொடர்ச்சியாக பொய் பிரசாரம் செய்வார்கள். போலியான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். 

நாட்டிற்கு அவசியத் தேவை கல்வி. ஆனால் இந்திய ஐக்கிய நாட்டு அதிபர், என்றோ செத்துப்போன அரசனுக்கு சிலை வைப்பேன் என உறுதிமொழி அளிக்கிறார். அதை மக்களுடைய வரிப்பணத்தில் செய்வார். கல்வியை விட சிலை வைப்பது முக்கியம் என அவர் மக்களிடம் மூளைச்சலவை செய்கிறார் பாருங்கள். உணவு, உடை, இருப்பிடம் முக்கியமில்லை. உன்னுடைய மதப்பெருமை முக்கியம் என இந்துத்துவ குண்டர்கள் கூறுகிறார்களே... எப்படி? அதுதான் விஷயம்....

பேட்டி ஹார்ட்ஸ் என்ற இளம்பெண் யார்?

இப்பெண் நாளிதழ் அதிபர் வில்லியம் ராண்டால்ப் ஹார்ஸ்ட்டின் பேத்தி. இவரை 1974ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தீவிரவாத இயக்கம் ஒன்று கடத்தியது. கடத்தியவர்கள் சும்மா இருப்பார்களா, பிள்ளையை அடித்து சித்திரவதைசெய்து வல்லுறவு செய்தனர். அப்போது பேட்டிக்கு வயது 17தான். அதே ஆண்டில் ஏப்ரல் மாதம், வங்கி ஒன்றை குழு ஒன்று கொள்ளையடித்தது. அந்த கூட்டத்தில் பேட்டி இருந்தார். அவரது புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டது. செப்டம்பர் மாதம் பேட்டி கைது செய்யப்பட்டார். நீதிமன்றம், அவர் ஆயுதத்தோடு வங்கியில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 35 ஆண்டுகள் தண்டனை விதித்தது. அப்போது அவரை கடத்தி வல்லுறவு செய்த கும்பலுக்கு என்ன தண்டனை? ம்ஹூம் அதைப் பற்றி எந்த பேச்சுமில்லை. பேட்டி, கடத்தல்கார ர்களிடமிருந்து தப்பிக்க முடியாமல் வங்கி கொள்ளையில் ஈடுபட்டார் என அரசு வழக்குரைஞர்கள் வாதாடினர். 
உண்மையில் அவர் விடுதலை பெற வாய்ப்பு இருந்தும் கூட உளவியல் ரீதியாக கொள்ளை கும்பலோடு இணைந்துவிட்டார். பிறகு அவர்களின் குற்றச்செயல்களில் பங்கேற்றார். 

அமெரிக்க நாட்டின் அதிபர் இந்த வழக்கில் தலையிட்டார். 35 ஆண்டுகள்  தண்டனை ஏழாண்டுகளாக குறைக்கப்பட்டது. பிறகு அதுவும் 21 மாதங்களாக குறைந்தது. பின்னாளில் பேட்டி தனக்கு ஏற்பட்ட கடத்தல் அனுபவங்கள் , உளவியல் சித்திரவதைகள் எப்படி பாதித்து அடையாளத்தை மாற்றியது என நூலாக எழுதினார். 

ட்ராமாடிக் பாண்டிங் என்றால் என்ன?

குடும்ப வன்முறையை செய்பவர்களை, அந்த வன்முறைக்கு இலக்காகும் பெண்களே காப்பாற்றுவார்கள். அதைத்தான் ட்ராமாடிக் பாண்டிங் என்பார்கள். இதற்கு காரணம், கணவர், மனைவியின் அடிப்படை தன்னம்பிக்கையை வசைபாடி அடித்து உதைத்து சிதைத்துவிடுவார். எனவே, பெண்களுக்கு வெளியுலகை எதிர்கொள்ளும் நம்பிக்கை இருக்காது. எனவே, அவர்கள் அடித்தாலும் உதைத்தாலும் புருஷன்தான் என நச்சு உறவுக்குள் வாழ்வார்கள். இதனால் அவர்களுக்கு பொருளாதாரம், சமூகம் தனிபட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சி என எதுவுமே இருக்காது. இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ராணுவத்தில் உள்ள வீரர்கள், ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு உயிர்பிழைத்தால் வீடு வருவார்கள். இல்லையா தேசியக்கொடியை போர்த்தி குழி தோண்டி புதைத்துவிடுவார்கள். இப்படியான நிலையில் ராணுவ வீரர்கள் தங்கள் குழுவினரோடு நெருக்கமான உறவை பேணுவார்கள். அந்த வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தாலும் கூட நட்போடு இருப்பார்கள். இதுவும் கூட ட்ராமாடிக் பாண்டிங் என்ற நெருக்கடி உறவு பிணைப்பை நினைவுறுத்துகிற ஒன்றுதான். 

பெண்களுக்கு எதிரான வன்முறை எப்படி அதிகரித்து வருகிறது?
 
சாதி, மத, நிற பேதங்கள் இன்றி பெண்கள் மீது வன்முறை கூடிக்கொண்டு வருகிறது. ஒரு பாடகி, தன் மீது பாலியல் சீண்டல் செய்த ஒரு செல்வாக்கு வாய்ந்த திரைப்பட பாடலாசிரியர் மீது புகார் கொடுக்கிறார். அவர் சாதி அடிப்படையில் மேல்சாதியினர். அந்த ஒற்றை காரணத்தை முன்னே கொண்டு வந்து அவரை விபச்சாரி என தூற்றியது முற்போக்கு மாநிலமான தமிழ்நாட்டில் நடந்தது. பாடகியின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, சமூக ரீதியான தண்டனையாக அவருக்கு தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் கடுமையாக தூற்றப்பட்டு வசைபாடி இழிவு செய்யப்பட்டார். சமூக ரீதியாகவே யார் பாலியல் வன்முறையை புகார் அளிக்கவேண்டும் கூடாது என வரைமுறையை சில சமூகவிரோத சக்திகள் உருவாக்கிவிட்டன. சட்டம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. பெண்கள் மீதான வன்முறையை இயல்பாக்கும் வேலையை திரைப்படங்கள், மட்டமான சிறுகதைகள், நாவல்கள் செய்கின்றன. வறுமை, போர், அரசியல் பொருளாதார சமநிலை  இன்மை ஆகியவைதான் பெண்கள் மீதான வன்முறையை ஊக்குவிக்கும் காரணி. பெண்கள் தங்கள் மீதான வன்முறையை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். இன்று அதற்கான பல்வேறு வசதிகளை அரசுகள் உருவாக்கி வருகின்றன. முன்முடிவுகள் இன்றி பாதிக்கப்பட்ட பெண் பற்றி விசாரித்து உண்மை அறிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க சமூகம் முயலவேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!