சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்





 சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்
ராமச்சந்திர குகா
கிழக்கு பதிப்பகம்

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மூலம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டனர் என்பதை நூல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையோடு, முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சந்தேகப்பட்டது, அரசியல் பிரசாரங்களில் பேசியது, அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுத்தது எல்லாமே ராமச்சந்திர குகாவின் எழுத்தில் பதிவாகியுள்ளது. 

இதைப் படித்தால், மதவாத சக்திகள் வல்லபாய் படேலுக்கு எதற்கு சிலை வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கிறித்தவ கன்னியாஸ்தீரிகள் மதமாற்றம் செய்ததாக இந்து குண்டர் அமைப்பு கொடுத்து புகாரின் பெயரில் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே, இ்ந்திய ஐக்கிய நாடு என்பது நொறுங்கிக்கொண்டிருக்கும் குடியரசுதான். இனி இந்த நாடு, எத்தனை துண்டுகளாக உடையப்போகிறது என்பதுதான் எதிர்பார்க்க வேண்டிய ஒரே விஷயம். 

நூலில் நேரு கொண்டிருந்த கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று சமயச்சார்பற்ற நாடாக இந்தியாவை வளர்த்தெடுக்க முயன்றது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கியது. இந்த இரண்டு விஷயங்களுமே இன்று மெல்ல அழிந்து வருகிறது. நடைமுறையில் நேரு உருவாக்கிய இந்தியா இப்போது இல்லை. சமூக நடைமுறைப்படி, இந்து பெரும்பான்மையே உள்ளது. சட்டப்படி சிறுபான்மையினரை, தாழ்த்தப்பட்டவர்களை பழையபடி வேதகாலத்திற்கு கொண்டு செல்ல இந்துத்துவ சக்திகள் முயன்று வருகின்றன. 

நூல் 31 பக்கம்தான். ஆனால், இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சமகாலத்தோடு இணைத்து சிந்தித்துப் பார்க்கத்தக்கவையாகவே உள்ளது. நூலில், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஆகாகான் ஆகியோரது சிந்தனைகள் எப்படியானவை, மக்களின் வாழ்க்கையில் பிரதிபலித்தவை எவை என ஓரளவுக்கு விளக்கமாகவே எழுதப்பட்டுள்ளது. சுதந்திரமடைந்த ஆண்டுகளில் இந்தியா சிறுபான்மையினர் நலனில் ஓரளவுக்கு முன்னேறியுள்ளது என நூலில் பெருமைமிகுந்த வாசகம் உள்ளது. ஆனால், இன்றைக்கு சிறுபான்மையினர் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர்களைக் கூட வங்கதேசத்தினர் என இந்துத்துவ குண்டர்கள் பிரசாரம் செய்து வரும் சூழ்நிலையில் நம்பிக்கை தரும் வாசகம், என்ன விளைவை நமக்கு அளிக்கும் என்று புரியவில்லை. 

நூலில் நேரு, மதவாத சக்திகளை எதிர்த்து தொடர்ச்சியாக மாநில முதல்வர்களுக்கு கடிதங்களை எழுதினார். அதில் தன்னுடைய மதச்சார்பற்ற கருத்துகளை வெளிப்படையாக வலியுறுத்தினார். அதை எத்தனை முதல்வர்கள் பின்பற்றினார்களோ தெரியாது. ஆனால் ஆட்சித்தலைவர் எப்படி இருக்கவேண்டும், நேரு எப்படி இருந்தார், என்ன யோசித்தார் என்பது தெளிவாக தெரிகிறது. முஸ்லீம்களைப் பற்றி பேசிய அளவுக்கு கிறித்தவர்களைப் பற்றி நூல் பேசவில்லை. சிறிய நூல் அல்லவா, அதை பெரிதாக எதிர்பார்க்க முடியாது. முஸ்லீம்கள், அவர்களின் நலன்களைப் பற்றி யோசித்த சிந்தித்த அரசியல்வாதிகள்,அ வர்களின் நூல்களை பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவற்றைத் தேடி வாசிப்பவர்கள் வாசிக்கலாம். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!