பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

 




பட்டுச்சாலை நோக்கம்

நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம். 

பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 

பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும் கூட பசி, பட்டினி, குழப்பம் என தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த நாடுகள், வளர்ந்த நாடுகளின் உத்திகளை பின்பற்ற முடியாது. உலகில் அமைதியை ஏற்படுத்தும் அமைப்புகளாக உலக வங்கி, ஐநா சபை, உலக நாணய நிதியம் ஆகிய அமைப்புகளைக் கூறலாம். இவை அனைத்துமே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்டவை. நேட்டோ, ஆசியன், எஸ்சிஓ ஆகிய அமைப்புகளை பல்வேறு நாடுகள் வெவ்வேறு நோக்கங்களுக்காக தொடங்கி நடத்தி வருகின்றன. 

உலக நாணய நிதியகத்தில் புதிய தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமானாலும் அதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்கவேண்டும். அல்லாதபோது பிற நாடுகள் எவ்வளவு முயன்றாலும் எந்த தீர்வும் கிடைக்காது. உலக நாணய நிதியகத்தில் அமெரிக்காவுக்கு 18 சதவீத வாக்குகள் உள்ளன. எனவே 85 வாக்குகள் தீர்மானத்திற்கு கிடைத்தாலும் அதை நிறைவேற்ற முடியாது. பொருளாதார பிரச்னைகளுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முயன்றபோது, அமெரிக்கா அதை அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. இதனால் நாடுகள் பலவும் தங்களது நலன்களைக் காக்க தனி அமைப்புகள், வணிகத்திற்கென தனி நாணயங்களை பயன்படுத்த முயல்கின்றன. 

பட்டுச்சாலை திட்டத்திலுள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி 20 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சதவீதமும் அதிகரித்து வருகிறது. இந்த திட்டத்தின் காரணமாக மக்களோடு மக்கள் பழகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேசிய அரசியல் நிலை, மத நம்பிக்கை, பொதுமக்கள் கருத்து என பலவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. சீனா, மனித குலத்திற்கான பொது விதி என்ற திட்டத்தை உருவாக்கி இயங்கி வருகிறது. உலகளவில் கல்வி வழங்குவதில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. எட்டு சதவீத மாணவர்கள் சீனாவில் கல்வி பயில்கிறார்கள். 2014ஆம் ஆண்டு வாக்கில் 203 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சீனத்தில் உள்ள 775 கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயின்றனர். 

பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளில் உள்ள மாணவர்கள் அதிகம் சீனாவில் படிக்கிறார்கள். குறிப்பாக தென்கொரியா, தாய்லாந்து, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் மாணவர்களை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். சீனாவில் படித்த மாணவர்கள், தங்கள் நாடுகளுக்கு திரும்பி கல்வியறிவை நாட்டின் வளத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். பட்டுச்சாலை திட்டத்தில் சீனாவைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி இயங்கி வருகின்றன. 

சீனா, 180 நாடுகளி் கல்வி தொடர்பான மாணவர் பரிமாற்றம், ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. பல்வேறு வளர்ந்த, வளரும் நாடுகள் சீனாவில் கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. சீனாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும் தங்களுடைய கல்விச்சேவையை வேறு நாடுகளிலும் தொடங்கி வருகிறது.  

மூலம்
சீனா பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் - எகனாமிக் ஜியோகிராபி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!