நல்ல பழக்கவழக்கங்களுக்கு சூழ்நிலை முக்கியமா?


 கெட்ட பழக்கங்களை கைவிடமுடியாததன் காரணம் என்ன?

கெட்ட பழக்கம் என்று இங்கு குறிப்பிடுவது ஒருவரின் உடல்நலனைக் கெடுப்பது மட்டுமே. ஒருவரின் மனநிலை, சமூகத்தை, நாட்டை கெடுக்கும் பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் தனி. கெட்ட பழக்கம் என்று சொல்வதை பான்பராக் போடுவது, புகையிலை பயன்படுத்துவது, மதுபானம் அருந்துவது ஆகியவற்றை வைத்து புரிந்துகொள்ளலாம். இதன்படி, ஒருவரின் மூளையில் கெட்ட விஷயங்களை செய்யும்போது குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் உருவாகிறது. அவையே திரும்ப திரும்ப புகையிலை பயன்படுத்துவது, பான்பராக் போடுவது ஆகிய செயல்களை ஊக்குவிக்கிறது. நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்ள இதுபோல மூளையில் பதியும் அளவுக்கு ஏதேனும் பரிசுகளை தருவதாக செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு நீங்களே பரிசு அளித்துக்கொள்ளலாம். மன அழுத்தம் காரணமாக மது அருந்தினால், மதுவை நிறுத்திவிட்டு தியானம், உடற்பயிற்சி என கவனம் செலுத்தலாம். நல்ல பழக்கங்களை பழகி பயிற்சி செய்ய காலம் எடுக்கும். 

நல்ல பழக்கங்களை தொடர்வது எப்படி?

இரு நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது தியானத்தை செய்யவேண்டும். அதை அப்படியே மெல்ல அதிகரித்து கொள்ளலாம். ஒரேயடியாக அதிகளவு செய்தால் சோர்வடைந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். சிறியதாக தொடங்கி தொடர்ந்து செய்வதே பழக்கங்களை கைக்கொள்ள வழி. அதிகமாக செய்யக்கூடாது. இன்று இது போதும் என ஓஷோ சொல்லி உரையை முடிக்கிறார் அல்லவா? அதிகமாக செய்யத் தோன்றினாலும் குறைவாகவே செய்யவேண்டும். 

நல்ல பழக்கவழக்கங்களுக்கு சூழ்நிலை முக்கியமா?

டாஸ்மாக்கில் வேலை செய்பவன் குடிக்காமல் இருப்பதுதானே சாதனை? ஆனாலும் கூட அது நேர்மறையான சூழ்நிலை அல்ல. எனவே, பதவி, அதிகார வெறி கொண்ட ஆட்களோடு வேலை செய்வது இயல்பாகவே உளவியல் அழுத்தம், மனச்சோர்வை, சிதைவை உருவாக்கும். அவர்கள் அந்தளவு கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள். மோசமான உங்களை அழிக்கும் வக்கிரம் கொண்டவர்கள் உள்ள அலுவலக சூழ்நிலையில் இருந்து வெளியேறுங்கள். உங்களது மனதை வலிமைப்படுத்திக்கொள்ளுங்கள். நேர்மறையான ஆட்கள் உங்களை சுற்றி இருக்குமாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்ளுங்கள். இதை உருவாக்கிக்கொள்வது நிச்சயம் கடினம்தான் அப்படியல்லாதபோது வேறு வேலை தேடுங்கள். நச்சான சூழ்நிலையைக் கைவிடுங்கள். அதுவே உடலுக்கும், மனதுக்கும் நல்லது. 

சகோதர சண்டை நல்லதா?

பெற்றோரின் கவனம், சொத்துகள், அங்கீகாரம், மேலாதிக்கம் ஆகிய காரணங்களுக்காக சகோதர சண்டை உருவாகிறது. போட்டி நிறைந்த உலகில் இத்தகைய செயல்பாடுகளை ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியாது. ஒற்றைப் பிள்ளையாக இருந்தால் பிரச்னை இல்லை. இரு பிள்ளைகள் இருப்பது எப்போதுமே கருத்து முரண்பாடுகளை சண்டைகளை கொண்டு வரும். பெற்றோர் தலையிட்டால் சகோதர உறவு அவர்களது மறைவுக்கு பிறகும் கூட தொடர வாய்ப்புள்ளது. 

விவாகரத்து எதிர்மறையான விளைவை உருவாக்குகிறதுதா?


விவாகரத்து கோருபவர்களுக்கு அடுத்து என்ன என தடுமாறுவார்கள். பொருளாதார நிலை, வேலை, செலவுகள், சமூக நிலை ஆகியவை காரணமாக மன அழுத்தம் கூடும். மற்றபடி முழுக்க எதிர்மறையான நிலை என்று கூற முடியாது. கசப்பு தாங்க முடியாத நிலையில்தான் விவாகரத்து கோரப்படுகிறது. சிறுவயதில் ஒருவர் நிறைய பொறுப்புகளை சுமப்பது, அவருக்கு கோபத்தை உருவாக்கலாம். பாதுகாப்பின்மை உணர்வு தோன்றலாம். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!