தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
திருமணத்தைப் பற்றி பேசவேண்டியது அவசியமா?
காதல் என்ற உறவு, திருமணம் என்ற இடத்தை எட்டும்போது சட்டப்பூர்வமாகிறது. நிலைத்து நிற்கும் உறவு என்பதை திருமணமே சாத்தியப்படுத்துகிறது என பலரும் கருதுகிறார்கள். அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி, 57 சதவீதம் பேர் பதினைந்து வயது தாண்டியவுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறியது. 44 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிய வந்தது. ஒற்றைப் பெற்றோர் எண்ணிக்கை கூடிவருகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், வீட்டில் ஒற்றை மனிதராக தனியாக வாழ்வது என எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் உள்ளன. இவைதான் திருமணத்திற்கு தடையா? ஆண், பெண் என இருபாலினத்தவரும் ஒன்றாக வாழ திருமணம் மட்டும்தான் ஒரே வாய்ப்பாக உள்ளதா என்று கேட்டால் இல்லை. திருமணம் செய்துகொள்பவர்கள் இன்றுமே அதிகமாக உள்ளனர். அதற்கு கிராமம், நகரம் ஆகியவற்றில் நிலவி வரும் சமூக அழுத்தம் காரணமாக இருக்கலாம்.
திருமணம் தரும் பயன்கள் என்னென்ன?
திருமணம் செய்தவர்களுக்கு உடல், மன ரீதியான அழுத்தங்கள் குறைவாக உள்ளது. அதாவது, கணவர் அல்லது மனைவியை இழந்தவர் அதாவது கைம்பெண் நிலையில் உள்ளவர்களை ஒப்பிடும்போது என புரிந்துகொள்ளலாம். திருமணம் சுரண்டலாக, கொடுமையான நரகமாக உள்ளது என்பவர்களோடு ஒப்பிட்டால் தனியாக வாழ்வது எவ்வளவோ பரவாயில்லைதான். திருப்தி இல்லாத திருமணங்களில் மன அழுத்தம் அதிகம். திருமணம் செய்வதால் உடல், மனம் சார்ந்த பயன்கள் கிடைக்கிறதா அல்லது நீண்டகால உறவை ஒருவர் தொடர்வதால் கிடைக்கும் பயன்களாக என்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது.
சமூக பாதுகாப்பு என்பதை திருமணம் வழங்குகிறது. தனியாக வாழ்பவர்கள் இன்றெல்லாம் திருமணமானவர்கள் போலவே வலுவான சமூக வலையமைப்பு ஒன்றை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
திருமணத்தைக் காப்பாற்றுவது எது?
இரு பாலினத்தவரும் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்வதுதான். முரண்பாடுகளை இருவருக்கும் காயம்படாமல் தீர்த்துக்கொள்வது, சரியான தகவல் தொடர்பு, பொருளாதார நிலைத்தன்மை, குடும்ப ஆதரவு, எடுத்துக்கொண்ட பொறுப்பை தோளில் சுமந்து நிறைவேற்றுவது ஆகியவை முக்கியம். இதெல்லாம் திருமணத்தை காப்பாற்றுகிற விஷயங்கள்.
திருமணத்தை தோல்வியுறச்செய்வது எது?
மிக இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது, சற்று முதிர்ச்சி அடைந்தவர்கள் செய்துகொள்ளும் திருமண உறவைப் போல ஆயுள் கொண்டிருப்பதில்லை. இதில் இளமை பிரச்னையில்லை. சரியான தகவல்தொடர்பு இன்மை, தீவிர பாதுகாப்பு உணர்வு, குறை, புகார்களை அடுக்குவது, தன்னை சுவர்களுக்குள் ஒடுக்கிக்கொள்வது, பொருளாதார வலிமையின்மை ஆகியவை திருமண உறவை உடைத்து நொறுக்குகிறது. இப்படிப்பட்ட விவகாரங்கள் நடைபெற்றுவிட்டாலே தம்பதிகள் தனியாக பிரிந்து வாழ்வார்கள் அல்லது விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என ஆய்வாளர் ஜான் காட்மன் ஆராய்ச்சி செய்து கூறியிருக்கிறார்.
தம்பதிகள் ஒரேமாதிரியான ஆர்வங்களை கொண்டிருந்தால் நல்லதா?
எதிர்முனைகள் ஈர்க்கும் என்பது காந்தங்களுக்கு பொருந்தும். ஆனால், நடைமுறையில் தம்பதிகள் தங்களைப்போன்ற கருத்துகள், விருப்பங்கள், ஈர்ப்புகளை கொண்டிருப்பவர்கைள அதிகம் நாடுகிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. குணம், ஆளுமை, சாதி, மதம், இன பின்னணி, கல்வி இலக்குகள், உயரம் இதெல்லாம் கூட தம்பதிகளுக்கு ஒற்றுமை தேவைப்படுகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் அத்தனை விருப்பங்களையும் காதலர், காதலிக்கு கூறவேண்டியதில்லை. ஆனால் அவை ஒன்றுபோல இருந்தால் உறவின் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு, அவசியமா?
திருமணமானவர்கள், தங்களுக்குள் மனம் திறந்து உரையாடவேண்டும். அதாவது அவர்கள் தொடர்பான விஷயங்கள் பற்றி. கடந்தகால காதல் பற்றியெல்லாம் அல்ல. ஒருவர் என்ன யோசிக்கிறார், மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளாரா இல்லையா என்பதை தம்பதிகள் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். குழந்தைகள் பெற்றுவிட்டால் தம்பதிகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என பொதுவாக மூடநம்பிக்கை ஒன்று உலவுகிறது. அது தவறு. பிள்ளைகள் பெறுவதற்கும், பெண் உச்ச இன்பத்தை அடைவதற்கும் தொடர்பு கிடையாது. அதுபோலவே பிள்ளைகள் பெறுவது இயற்கையாக நடைபெறுவது. அது தம்பதிகள் ஒற்றுமையாக மனமொத்து வாழ்கிறார்கள் என்பதற்கான சான்று கிடையாது. சரியாக உரையாடாமை, புரிந்துகொள்ளாமை, கருத்து முரண்பாடுகள் இதெல்லாமே தகவல்தொடர்பு பிரச்னையால் எழுகிறது. திருமணம் தாண்டிய உறவை நோக்கி செல்ல தம்பதிகள் இருவரையும் தூண்டுவது மனம் விட்டு பிரச்னைகளை பேசாததுதான்.

கருத்துகள்
கருத்துரையிடுக