ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!

 




ஆப் வழியாக கண்காணிப்பு

சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. 

ஹெபாய் மாகாணத்தில் ஓரிடத்தில் அதிபர் ஷியின் பேச்சை ஒலிப்பெருக்கி மூலம் தொடர்ச்சியாக ஒலிக்க விடுகிறார்கள். இச்சோதனை வெற்றிபெற்றால் நாடு முழுக்க ஒலிப்பெருக்கி உரைகள் மக்களுக்கு கேட்கும். அடுத்தது நூல். 2020ஆம் ஆண்டு சீன அரசு நிர்வாகம் பற்றிய மூன்றாவது தொகுதி நூல் வெளியானது. உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் வான் யி, தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள உலக ஆராய்ச்சி படிப்புகளுக்கான சீனா இன்ஸ்டிடியூட்டில் ஷியின் கருத்துகளுக்கென தனி ஆய்வு மையத்தை தொடங்கினார். 

பொதுவுடைமைக் கட்சியில் ஷியின் செல்வாக்கை எதிர்க்கும் ஆட்களும் இல்லாமல் இல்லை. எனவே, மாவோ போல ஷி தனது கருத்தை கல்வெட்டில் பொறித்தது போல கூற முடியவில்லை. ஆவணங்களில் ஷியின் கருத்து என்று எளிமையாகவே அரசியல் சமூக கொள்கை உள்ளது இதை விரிவாக சொன்னால் புதிய நூற்றாண்டிற்கான ஷி ச்சின்பிங்கின் சோசலிச கருத்து என கூறலாம். 

ஷி எழுதிய நான்காவது அரச நிர்வாகம் நூல், 2022ஆம் ஆண்டு வெளியானது. அவர் மூன்று விதமான உரைகளை ஆற்றியுள்ளார். முதலில், ஐந்தாண்டு திட்டம், கட்சிக்கான இலக்குகளை பற்றி விளக்கி உரைகள், அடுத்து அவர் தலைவராக உள்ள சிறிய அமைப்புகளில் ஆற்றிய உரைகள், மூன்றாவது, அவர் வெளிநாடுகளில் இரு நாட்டு உறவு பற்றி ஆற்றும் உரைகள்.


இமாலயத் தலைவர் டெங் உருவாக்கிய அரசியல், சமூக கொள்கைகள் பொருளாதார வலிமை பற்றியது. மத்திய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தாதது. மக்கள் தனிமனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வலிமையை அளிப்பது. அதேசமயம், சோவியத் யூனியனின் பொதுவுடைக் கட்சி அரசு ஆட்சி பொறுப்பை இழந்தது போன்ற சூழலை ஷி விரும்பவில்லை. எனவே, அவர் லெனினிய கொள்கைகளை கடைபிடிப்பதோடு கட்சியில் கூட்டுத்தலைமை என்பதை நீக்கிவிட்டு தன்னை வலிமைப்படுத்தி வருகிறார். கட்சிக்குள்ளும் சீனப்பெருமை அதாவது தேசியவாதத்தை அதிகரித்து வருகிறார். 

கட்சியில் நாட்டின் வரலாறு பொதுவுடைக்கட்சி இல்லாமல் கிடையாது என்ற நிலைமை இருந்தது. இப்போது ஷி தான் இல்லாவிட்டால் மகத்தான சீனக்கனவு என்ற தொலைநோக்கு நடைபெறாது என்ற எண்ணத்தை விதைத்து வருகிறார். லெனினிய கட்டமைப்பை ஜனநாயக மையப்படுத்துதலோடு இணைத்து தன்னை காத்துக்கொண்டுள்ளார். 

நாட்டை மறுமலர்ச்சி செய்வது, புதுப்பிப்பதே மக்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும் என நம்ப வைக்க ஷி முயன்று வருகிறார். சீனா, பல நூறு ஆண்டுகளாக அந்நிய நாடுகளின் சிக்கித் தவித்தது. அடிமையாக வாழ்ந்த மக்களை மீட்டு அவர்களை கௌரவப்படுத்தியது பொதுவுடைமைக்கட்சி. பாதை, கொள்கை, அமைப்பு, கலாசாரம், சோசலிசம் ஆகியவற்றில் தன்னம்பிக்கையை வலியுறுத்துகிறார். 

அரசின் திட்டங்களை பிரச்சாரம் செய்வது, நவீன தொழில்நுட்பங்களின் பரவல், கண்காணிப்பு மூலம் சமூகத்தை வலிமையாக்குவது, வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, தன்னிறைவு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை வலிமைப்படுத்துதல், பிற நாடுகள் சீனாவை அங்கீகரித்து ஏற்பது ஆகியவற்றை நோக்கி ஷி முன்னேறிச் சென்று வருகிறார். 

சந்தையை ஒழுங்குபடுத்தி தனியார் நிறுவனங்களை கண்காணித்து சொத்துகளை, வளங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதன் வழியாக பொதுவான வளம், வளர்ச்சியை நோக்கி செல்லவேண்டும் என ஷி திட்டமிடுகிறார். 

சீனாவில் வலிமையுள்ள அரசியல் ஆளுமையாக ஷி ச்சின்பிங் இருக்கிறார். ஆனால் பொதுவுடைமைக் கட்சியோடு ஒப்பிடும்போது, அதை கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் அவர் இருக்கிறார். இதுவரை சர்வாதிகாரியாக மாறவில்லை என்று கூறலாம். லெனினிய அடையாளத்தை பொதுவுடமைக் கட்சி கொண்டிருந்தது உண்மை. ஆனால் அந்த அடையாளம் டெங் ஷியாவோபிங் காலத்தில் முழுக்க தொலைந்துபோய்விட்டது. டெங், முதலாளித்துவ கொள்கைகளை சீனாவில் நடைமுறைப்படுத்தி பொருளாதாரத்தை வெளிநாட்டினருக்காக திறந்துவிட்டதே காரணம்.

2012ஆம் ஆண்டு, பொதுவுடைமைக் கட்சியை ஹூ ஜின்டாவோ, ஷியிடம் ஒப்படைத்தபோது கட்சி ஊழலால் உருக்குலைந்து நொடிந்து போயிருந்தது. இதை சீராக்கவே ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தார், ஆயிரக்கணக்கான மேல்தட்டு வர்க்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊழலை அப்படியே விட்டுவைத்தால் முதலில் கட்சி அழியும். பிறகு நாடே அழிந்துவிடும் என ஷி யோசித்தார். 

ஷாங்காய் குழு, பொதுவுடைமைக் கட்சி இளைஞர்கள் குழு என இரண்டு குழுக்களையும் சேர்ந்தவர் கிடையாது. அவருக்கு பின்புலமாக எந்த ஆற்றல் வாய்ந்த குழுக்களும் இல்லை என்பதே அவரை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இருந்த சாதகம். கட்சி உறுப்பினர்களை சிறப்பாக ஒருங்கிணைப்பவர் என்ற புகழ் மட்டுமே கையில் இருந்தது. இதையெல்லாம் தாண்டி பொதுவுடைமைக் கட்சி நிறுவனர்களில் ஒருவரான ஷி ஸாங்குசுனின் மகன். மற்ற குடும்ப வாரிசுகளை விட அடக்கியே வாசித்தார். எனவே, அவரின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை பொதுவுடைமக் கட்சியையை அதிர்ச்சியுற வைத்தது.. 

தனக்கும், கட்சிக்குமான விசுவாசம் முக்கியம் என்பதை ஷி தெளிவுபடுத்தினார். அப்படி கட்சி விசுவாசம், நேர்மை இல்லாதவர்களை நல்வழிப்படுத்தும் தண்டனைகளை வழங்கத் தொடங்கினார். இந்த நல்வழிப்படுத்தும் வழக்கம் மாவோ காலத்தில் புழக்கத்தில் இருந்தது. கட்சிக்கு விசுவாசம் இல்லாத நிலை, ஊழல்களுக்கு, தீவினைகளுக்கு வித்திடும் என ஷி உறுதியாக நம்புகிறார். 

மூலம் - தி பொலிட்டிகல் தாட் ஆஃப் ஷி ச்சின்பிங் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!