சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே... சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது. அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...