இடுகைகள்

ஆவேசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் பெருகும் ஆவேசத்தை, கோபத்தை மடைமாற்ற முடியுமா?

படம்
  ஆவேச உள்ளுணர்வு என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாம். அதை விளையாட்டு மூலம் எளிதாக வெளிப்படுத்தலாம் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திலும் அப்படி வெளிப்படுத்துவது, விதியாக இல்லாதபோதும் வரவேற்கப்படுவதில்லை. தன் கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வீரர் ஊடகங்களில் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படுகிறார். பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தால் ஆவேச உள்ளுணர்வு என்பதை உயிர்கள் பிழைப்பதற்கான வாசலாக பார்க்கலாம். வெல்லும் வெறி இல்லாமல் நாம் போர், நோய்களைத் தாண்டி பிழைத்து வந்திருக்க முடியாது. ஒருவகையில் உயிர்களை பிழைக்க வைப்பதற்கான ஆற்றலாக ஆவேசத்தைக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த உணர்வு உண்டு. உயிருக்கு ஆபத்து வரும்போது யாரும் பிறருக்கு செல்லம் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே நினைப்பார்கள்.   லோரன்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர் மனிதர்களுக்கு ஏற்படும் ஆவேசத்தை நேர்மறையாகவே அணுகிறார். தனது கோட்பாட்டை விலங்குகளை வைத்து சோதித்து நிரூபணம் செய்தார். சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆவேச உணர்வை குறிப்பிட்டபடி செயலில் பயன

மனதில் கிளர்ந்தெழும் ஆவேச உள்ளுணர்வு

படம்
  உளவியல் ரீதியான கோட்பாடுகள், ஒருவரின் ஆக்ரோஷமான குலைந்த மனநிலையை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால் அவரின் குற்றங்களை விளக்காது. இந்த வகையில் உளவியல் கோட்பாடுகளுக்கு வரம்புகள் உண்டு. குற்றம் செய்தவர்கள் அனைரையும் மனநிலை பிறழ்ந்தவர்கள், குறைபாடு கொண்டுவர்கள் என கூறிவிட முடியாது என உளவியலாளர் சீகல் கூறினார். இவரது கருத்து உண்மையா என்றால் உண்மைதான். துறை   சார்ந்து ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்போது வரம்புகள் உடையலாம். ஒருவர் தனியாக அமர்ந்து உளவியல் கோட்பாடுகளை உருவாக்கி அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருந்தால், அதில் குற்றவியல் சார்ந்த அம்சங்கள் குறைவாகவே இருக்கும். இதற்காக உளவியல் கோட்பாடுகளை ஒருவர் மேலும் துல்லியமாக்க மெனக்கெடலாம். குற்றம் நடைபெறுகிறது என்றால் அதற்கான உயிரியல், சூழல், உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தால் உளவியலின் பங்கு குற்றவியலில் உள்ளது என நம்பலாம். சூழல் சார்ந்த அம்சங்கள் என்றால் குற்றம் பற்றிய பொதுமக்களின் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகையில் குற்றத்தைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள உளவியல் விசாரணை பயன

வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி வண்டி ஓட்டும்போது ஆவேசம் ஏற்படுவது ஏன்? சிக்னலை நான் இன்று இரண்டு நொடி தாமதத்தில் கடந்தபோது, ஆக்டிவா பயனர் எனது தாயைப் பழிக்கும் சொல்லை மிக வேகமாக சொல்லிச்சென்றார். ஹாரிஸின் தொடக்க வரிகளைப் போல நிதானமாக யோசித்தபோதுதான் என்ன சொன்னார் என்றே எனக்கு அர்த்தமானது. வைல்ட் டேல்ஸ் என்ற படத்தில் சொகுசு காரில் செல்பவரை, டிரக் கார் வைத்திருப்பவர் கிண்டல் செய்வார். உடனே அதற்கு சொகுசு கார் வைத்திருப்பவர் டென்ஷன் ஆவார். இருவரும் ஒருவரையொருவர் கொல்லத் துரத்துவார்கள். இறுதியில் இருவரும் விபத்துக்குள்ளாகி இறப்பார்கள். இருவரும் நண்பர்கள் கிடையாது. ஆனால் ஒரு சின்ன சம்பவம். ஈகோவுக்கு ஆபத்தாக, சண்டை தொடங்குகிறது. பைக், கார் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக கிளம்புவதில்லை. காரணம், வண்டி இருக்கிறது. அழுத்திப் பிடித்தால் தாமதமான நேரத்தை எட்டிப்பிடித்துவிடலாம் என்ற பேராசை, மூர்க்கத் துணிச்சல். இதனால்தான். எந்த வண்டியில் பீக் அவரில் கூட வெள்ளைக் கோட்டிற்கு பின்னால் நிற்பதில்லை. அனைத்திலும் முந்தி என தினத்தந்தியின் டேக் லைன் போல அவசரப்படுவதுதான் இதில் பிரச்னையாகிறது

குடிக்கும்போது ஆவேசப்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனியின் ஏன்?எதற்கு?எப்படி? சிலர் மது அருந்தியதும் ஆவேசப்படுகிறார்களே ஏன்? மது அருந்தியவுடன் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. சிலருக்கு அது சாக்கு. சில விஷயங்களை அதைச் சாக்காக வைத்து சொல்லலாம். இது உளவியல். அறிவியல்படி என்ன சொல்ல லாம்? மூளையின் முன்முகுளப் பகுதியில் சுய கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் பகுதி ஆகியவற்றை மது பாதிக்கிறது. இப்பகுதி மழுங்கும்போதுதான், இதுவரை பார்த்திராத ஜேப்படித் திருடர்களோடு ஜோக் அடித்து சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து வண்டியில் வேகமாக செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சாதாரணமாக பார்க்கும்போது சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமல் அமைதியாக இருப்பவரும், குடிக்கும்போது டி.ஆர் மாதிரி ஆகிவிடுகிறார். நன்றி பிபிசி