இடுகைகள்

பிஸ்பெனால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்டிக்கில் உணவுப்பொருட்கள்! - ஆபத்தா?

படம்
பிளாஸ்டிக்கின் சேர்மானத்தில் நீக்கமற கலந்துள்ள பொருள் பிஸ்பெனால் - பிபிஏ. தற்போது உணவுப்பொருட்கள் மற்றும் நீர் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கும் பிளாஸ்டிக்குகளில் பிஸ்பெனால் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதிலும் ஆபத்து இல்லாமல் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில்,  பிஸ்பெனால் எஸ் மற்றும் பிஸ்பெனால் எஃப் எனும் இரு பொருட்கள் உள்ள பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும் என ஜர்னல் ஆஃப் தி எண்டோகிரைன் சொசைட்டி இதழ் கூறியுள்ளது. பிபிஏக்கும் மேற்சொன்ன இருபொருட்களுக்குமான அமைப்பு பெரிதும் வேறுபடவில்லை. இவை பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்கள் மற்றும் பிற பொருட்களில் காணப்படுகின்றன. எண்டோகிரைன் சொசைட்டி பத்திரிகை 2012 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, பிபிஏ வேதிப்பொருள் குழந்தைகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்து கூறியிருந்தது. பிபிஎஸ், பிபிஎஃப் ஆகிய பொருட்கள் உடல் பருமனை நேரடியாக அதிகரிப்பதில்லை. இவை உடல் பருமனால் அவதிப்படுபவர்களை பாதிக்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. இதனால் பிபிஏக்கு மாற்று இல்லையா என வேதனைப்பட அவசியமில்லை. அம