இடுகைகள்

கென்யா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

உணவு வேட்டையர்கள்! - நாடுகளைச் சூறையாடும் வெட்டுக்கிளிகள்

படம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வெட்டுக்கிளிகளின் கூட்டம் சூறையாடி வருகிறது. கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளை தற்போது வெட்டுக்கிளிகள் தாக்கி அங்குள்ள உணவுப்பொருட்களை அழித்து வருகின்றன.ஏற்கெனவே கடுமையான பஞ்சத்திலும், பொருளாதார தடுமாற்றத்திலும் உள்ள இந்த நாடுகள் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளன. வறட்சி நிரம்பிய பருவகாலம் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என ஐ.நா சபை எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஒருநாளில் வெட்டுக்கிளிகள் பிரான்ஸ் நாட்டு மக்கள்தொகையின் அளவுக்கான உணவை தின்று தீர்க்கின்றன. வெட்டுக்கிளியின் ஆயுள் ஐந்து மாதங்கள் என்றாலும், அதற்குள் ஓவர்டைம் வேலை பார்த்து தன் இனத்தை பெருக்குவது இவற்றின் பலம். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த கென்ய அரசிடம் காசு கிடையாது. இதற்காக ஐ.நா சபையிடம் நிதியுதவியாக 20 லட்ச ரூபாய் கேட்டது. தற்போது இத்தொகை அறுபது லட்சரூபாயாக உயர்ந்துள்ளது. காலம் அதிகமாகும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கான தொகையும் அதிகரிக்கும். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது சாதாரண காரியமல்ல. மேலும் இவற்றை கண்காணிப்பதும் கடினம். தினசரி 150 கி.மீ தூரம் பயண