இடுகைகள்

சிங்களம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறவுகளையும் உணர்ச்சிகளையும் நிலப்பரப்பு வழியாக இணைக்கும் சிறுகதைகள்! - உறவுப்பாலம் - இலங்கை சிறுகதைகள்(சிங்களம், ஆங்கிலம்)

படம்
                    உறவுப்பாலம் இலங்கை சிறுகதைகள் மொழிபெயர்ப்பு கண்ணையன் தட்சிணாமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் விலை 150 பக்கம் 254 நூலில் மூன்று பகுதிகள் உள்ளன சிங்களச் சிறுகதைகள் , தமிழ் சிறுகதைகள் , ஆங்கிலச் சிறுகதைகள் . இதில் உருப்படியாக இருக்கும் கதைகள் அனைத்தும் சிங்களம் , ஆங்கிலத்தில்தான் உள்ளன என்பதை கவனிப்பது அவசியம் . மொத்த கதைகள் இருபத்தைந்து அதில் , 18 கதைகளை நம்பிக்கையோடு படிக்கலாம் . மோசமில்லை . சிங்களச் சிறுகதைகளில் மறுபடியும் , இன்று என் மகன் வீடு திரும்புகிறான் , அக்கா ஆகிய கதைகள் சிறப்பாக உள்ளன . முதல்கதையான மறுபடியும் எழுத்தாளர் குணதாச அமரசேகர எழுதியது . பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியை ஒருவர் தனது பள்ளியை சென்று மீண்டும் பார்ப்பதுதான் கதை . இதற்குள் , அங்கு நடைபெறும் பிரச்னைகள் , அதனை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள் , உணர்ச்சிப்பூர்வமாக பள்ளி என்பதை பார்க்கும் ஆசிரியையின் கோணம் என பல்வேறு உணர்ச்சிகளின் கதம்பமாக கதை ரசிக்க வைக்கிறது . இன்று என் மகன் வீடு வருகிறான் - கருணா பெரைரா எழுதியது . இக்கதையை அங்கு நட

அந்தரே எனும் இலங்கை விகடகவி செய்யும் கோமாளித்தனங்கள்! அந்தரே கதைகள் - மாத்தளை சோமு

படம்
        அந்தரே கதைகள்    மாத்தளை சோமு தொகுத்துள்ள கதைகள் இவை. இலங்கையில் அரசு ஆண்ட ராஜசிங்கன் என்ற மன்னரின் அமைச்சரவையில் விகடகவியாக பணியாற்றியவர் அந்தரே. அவரது செயல்பாடுகள் ஏறத்தாழ தெனாலிராமன், பீர்பாலை ஒத்துள்ளன. அந்தரே பற்றிய கதைகள், சிங்களம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.  மாத்தளை சோமு தொகுத்துள்ள இக்கதைகள் குறைவானவைதான். நூல் மொத்தம் 68 பக்கங்கள், இதில் அனைத்து கதைகளும் அவரின் புத்திசாலித்தனத்தை நமக்கு கூறும் கதைகள் கிடையாது கருப்பு யானை வெள்ளை யானை கதையில் மன்னரிடம் திட்டு வாங்கி அவமானப்படுவது, தாயிடம் பலகாரம் திருடி திட்டு வாங்குவது, மனைவியை செவிடு என அறிமுகப்படுத்துவது நிறைய கதைகள் அந்தரேவை மாறுபட்ட ஒருவராக காட்டுகின்றன.  சிறிய எளிமையான கதைகள் என்பதால் எளிமையாக வேகமாக வாசித்துவிட முடியும். கதைகள் முடியும்போது அந்தரே வயதாகி இறந்துவிடுகிறார். அவர் இறந்து கிடக்கும் நிலையும் கூட ஒருவருக்கு சிரிப்பு வரும்படி உள்ளது என கதையை முடித்திருக்கிறார்கள். விகடகவி என்றால் எப்போதும் பிறரை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பவன் என்று கூறுவார்கள். இந்த கதை தொகுப்பில் அந்தரே என்பவன் தன் இயல்பான