இடுகைகள்

ஃ கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல