சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!
சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...