இடுகைகள்

எதிர்ப்பு செல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

படம்
          ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது . இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் . இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள் . அவர்கள் வாழும் இடம் , சாப்பிடும் உணவுகள் , டயட் கடைப்பிடிக்கிறார்களா , அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது , செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா , வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள் . இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் . ரத்த சோதனை , தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள் . இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும் , ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம் . மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள் . முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்ட