இடுகைகள்

கழிவறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புங்கமர நிழலாக பூக்கும் காதல்- கடிதங்கள் - கதிரவன்

படம்
  வெயிலுக்கு புங்க மர நிழல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலம் . மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது . வேலை செய்தே ஆகவேண்டும் . நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் . ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது . அதுதான் இருப்பதிலேயே கடினமானது . இனிய உதயம் பத்திரிகை படித்தேன் . இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார் . அதாவது மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருக்கிறார் . பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை . சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை . அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே . பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள் . இதனால் சுகுமாரனின் மீது அம்முக்குட்டிக்கு காதல் பிறக்கிறது . அவரைப் பார்க்கும்போது கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது . அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள் . அதற்குப் பிறகு , அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை . நன்றி ! அன்பரசு 30.11.2021 மயிலாப்பூர் -----------------

கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  30.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது.  இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள்.  இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை.  நன்றி!  அன்பரசு 2.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சள

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி

வரலாற்றை மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கழிவறை, காம்பஸ், வெடிமருந்து, கடிகாரம்

படம்
                    காம்பஸ் கி . பி 200 இரும்பினால் ஆன காம்பஸை முன்னர் சீனர்கள் கண்டுபிடித்தனர் . இவர்கள் கண்டுபிடித்த தற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் காந்த காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்குப்பிறகுதான் கப்பலில் மாலுமிகள் எளிதாக வழி கண்டுபிடித்து புதிய தேசங்களுக்கு சரியாக கடல் வழி கண்டுபிடித்து செல்ல முடிந்தது . இதன்மூலம் கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கு பயப்படாமல் பயணித்தனர் . 16 ஆவது மற்றும் 17 ஆவது நூற்றாண்டில் காம்பஸ் பெரிய புரட்சியை செய்தது எனலாம் . கடிகாரம் 13 ஆம் நூற்றாண்டு முள் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீர் , மணல் மூலம் கடிகார நேரம் கணிக்கப்பட்டு வந்தது . 13 ஆம் நூற்றாண்டில் மெல்ல எந்திர கடிகாரங்கள் உருவாக்கப்படத் தொடங்கின . அந்த காலகட்டத்தில் இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை பெரிதும் மக்கள் கவனிக்கவில்லை . ஆனால் இவை தென்பட்ட இடமாக தேவாலயங்களே இருந்தன . 14 ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்களில் கடிகாரங்கள் தென்பட்டன . பின்னர் எந்திர கடிகாரங்களின் நேர துல்லியம் மெல்ல அதிகரித்து 30 ஆண்டுக

பள்ளியை மாற்றிய ஆசிரியர்! -பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்

படம்
                               பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்   பள்ளியை மாற்றிய ஆசிரியர் பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக், 2020ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை வாங்கியுள்ளார். பீகாரிலுள்ள சரண் மாவட்டைச்சேர்ந்த சன்புரா பைஸ்மாரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர். என்ன செய்தார் என்று இவருக்கு நல்லாசிரியர் விருது? இந்த அரசுப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் வந்தபோது பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை குடிக்க குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்பதைக் கவனித்தார். இதனால் அங்குள்ள மக்களை சந்தித்தார் அவர்களிடம் பள்ளியின் நிலையைச் சொல்லி நிதியுதவியைக்கேட்டார். அவர்கள் மூலம் 98 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்துது. தனது சேமிப்பிலிருந்து 21 ஆயிரம் ரூபாயை அதில் தன் சார்பில் கொடு்த்தார். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து 5 ஆயிரம் ரூபாய் தந்தனர். இதன் காரணமாக இன்று பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது. சாப்பிடுவதற்கான அறை உள்ளது. மாணவர்களுக்கான வருகைப்பதிவு முறை டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வந்தது. அப்படி வந்தவர்களும் கழிவறை இல்ல

ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி? டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள். ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா? ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும். ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது? அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இட

ஸ்வச் பாரத் என்பது மாயக்கனவு! - பெசவாடா வில்சன்

படம்
பெசவாடா வில்சன் ஸ்வச் பாரத் கூட கழிவறைகளை கட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் அதனை இன்றுவரை சுத்தம் செய்பவர்களைப் பற்றி ஏதும் பேசுவதில்லையே? சாதியும் சுத்தமும் இந்தியாவில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவேதான் கழிவறைகளை கட்டுபவர்கள், அதனை சுத்தம் செய்பவர்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை. அரசு இதனைக் கவனத்தில் கொள்வது தலித்துகளின் மரணங்களைக் குறைக்கும். அரசு, மனிதக்கழிவு அள்ளுபவர்கள் என்று 54,130 பேர்களை அடையாளம் கண்டிருக்கிறதே? அரசு கூறும் கணக்கு உலர் கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்களை மட்டுமே. பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் டேங்குகளில் இறங்கி சுத்தப்படுத்துபவர்களை அரசு இன்றுவரையும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் கூறும் கருத்துகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் கருத்தாக சொல்வதை விட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும். சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர்களும் பலியாகாமல் இருக்கும். உண்மையில் எங்களுக்குத் தேவை நீதிமன்றங்களின் அனுதாபம் அல்ல. உறுதியான உயிர்களின் பலிகளைத் தடுக்கும் நடவடிக்கை மட்

மலம் கழிப்பவர்களைக் கொன்றால் மாற்றம் வந்துவிடாது! - பெசவாடா வில்சன்!

படம்
நேர்காணல் பெசவாடா வில்சன் பிரதமர் சுத்தம் தொடர்பான கோல்கீப்பர் ஆப் குளோபல் கோல்ஸ் விருது வென்றிருக்கிறார். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.  விருது பற்றி சொல்ல ஏதுமில்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பது மிகப்பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.  2011 சென்சஸ் படி  1.8 மில்லியன் பேர் வீடற்று தெருக்களில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு வாழ்வதற்கான என்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. திறந்தவெளி கழிவறை என்று நாட்டு மக்களை அடித்துக்கொல்லலாம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? தண்ணீர் மற்றும் சுகாதாரத்துறைக்கான செயலர் பரமேஸ்வரன் ஐயர், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கழிவறை மூலம் நூறு சதவீத சுத்தம் என்கிறாரே? அவர் கூறும் கழிவறைகளை அத்திட்டத்தின்படி அமைப்பதில்லை. மேலும் அவர் டெல்லியிலுள்ள பாதாள சாக்கடையில் இறங்கிப் பார்க்கட்டும். அந்த இடம் எப்படி இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும். வெளிப்புறத்தில் மலம் கழிப்பவர்களை எச்சரித்தார்கள், விசிலடித்து பயம் கொள்ளச் செய்தார்கள் என்ற வேகத்தில் இன்று கொலையும் செய்கிறார்கள். இத்திட்டத்தின்

பில்கேட்சிற்கு பிடித்த நூல்களில் சில....

படம்
ஐ கன்டைன் மல்டியூட்ஸ் எட் யங் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்கள் எப்படி நுண்ணூட்டச்சத்து பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று எட் யங் எழுதியுள்ளார். பிஹைண்ட் தி பியூட்டிஃபுல் ஃபாரெவர் காத்தரின் பூ கழிவறைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்று நம்புவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது. எனர்ஜி மித்ஸ் அண்ட் ரியாலிட்டிஸ் வேக்லாவ் ஸ்மில் அணுசக்தி என்பது கார்பன் வெளியீட்டைத் தடுக்கும் என ஸ்மில் நம்புகிறார். நம்முடைய இன்றைய அணுசக்தி முயற்சி எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கும் என்று கூறியிருக்கிறார். தி மோஸ்ட் பவர்புல் ஐடியா இன் தி வேர்ல்டு வில்லியம் ரோசன் உலகை மாற்றிய கண்டுபிடிப்பு நீராவி எஞ்சின். அதன் வரலாற்றை ரோசன் விவரித்திருக்கிறார்.