ஸ்நாப்சாட் படங்கள் முழுவதாக அழிவதில்லையா? மிஸ்டர் ரோனி பதில்கள்

Image result for norse runes


மிஸ்டர் ரோனி


தகவல்களை வயர்களின்றி பகிரும் தொழில்நுட்பத்திற்கு ப்ளூடூம் என்று பெயர் வந்தது எப்படி?


டென்மார்க் மன்னர் ஹெரால்டு பிலாடண்ட், முன்னர் டென்மார்க்கையும் நார்வேயையும் வன்முறையின்றி இணைத்தார். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அவரின் பெயரைக் குறிப்பிடும் விதமாக ப்ளூடூத் என்று பெயரிட்டனர். நோர்ஸ் எழுத்துவடிவில் பிலாடண்ட் என்பதை சுருக்கி பி என எழுதியிருப்பார்கள்.

Image result for snapchat phots


ஸ்நாப்சாட் புகைப்படங்களை நீங்கள் பார்த்தபிறகு என்னாகிறது தெரியுமா?


ஸ்நாப்சாட் நிறுவனம் அவற்றை அழித்து விடுவதாக கூறுகிறது. அதன் சர்வர்களிலிருந்து நீக்கிவிடுவதாக கூறியிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லை. உங்கள் போனில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை திரும்ப மீட்க முடியும். மின் கோப்புகளை அழிக்கும்போது அவை அழிந்துபோனது போல தோன்றினாலும், அவற்றை திரும்ப பெறமுடியும். அதாவது அவை நம் பார்வைக்குத் தெரியாது. திரும்ப அவற்றை பயன்படுத்தும் வரை போனிலுள்ள நினைவகத்தில் இருக்கும்.

ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி வேலை செய்கிறது?

அனைத்து பேட்டரிகளுக்கும் அடிப்படை மூன்றுதான். அனோடு, கேத்தோடு, அமிலம். இவற்றுக்கு இடையில் நடைபெறும். மீண்டும் ரீசார்ஜ் செய்யும் பேட்டரிகளின் இயக்கமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடைபெறும். பிறகு அதனை செயல்பாடும் குறைந்து முடங்கும்.

தானியங்கியாக செயல்படும் கழிவறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதில் சிறிய பட்டன் போல சென்சார் இருக்கும். கழிவறையில் உட்காரும் மனிதர்களின் உடல் வெப்பம் ஆகியவற்றை கணித்து நீரை திறந்துவிடும் எலக்ட்ரானிக் வால்வுக்கு சிக்னல் கொடுக்கும். இதன்காரணமாக நீர், மலம் கழித்து எழுந்தவுடன் கழிவறை பீங்கானை சுத்தம் செய்கிறது. பெரும்பாலும் இந்த முறையிலான கழிவறை பேட்டரியால் இயங்கும்படி வடிவமைக்கிறார்கள். காரணம், மின்சாரமும், நீரும் சேரும்போது மனிதர்களைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதால்தான்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்