கல்விக்கான நிதியை வெட்டும் இந்திய அரசு!



Street, People, Children, School, Boy, Education
pixabay



இந்திய அரசு, கல்விக்கான பட்ஜெட் தொகை குறைந்து வருவதால், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. 



கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்விக்கான பட்ஜெட் தொகை பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதனால், பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலுள்ள அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் தம் கல்விக்கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள பட்டியலின மாணவர்கள் (SC,ST), கல்வி கற்கும் சதவீதம் 20 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஎஸ்இ வாரியம், பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுக் கட்டணங்களை உயர்த்தியது. இதன்விளைவாக எஸ்.சி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.50லிருந்து ரூ.1,500 ஆக அதிகரித்தது. இதோடு ஐஐடி, எய்ம்ஸ், ஜேஎன்யு ஆகிய கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களும் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
2014- 15 லிருந்து 2019 -2020 வரையிலான காலகட்டத்தில் கல்விக்கான அரசின் செலவு 4.1லிருந்து 3.4 ஆக சரிந்துள்ளது. இதன் விளைவாக, மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. தற்போது, இதனை நம்பி படித்து வந்த மாணவர்கள் படிப்பை நிறுத்தும்படியான சூழல் உருவாகியுள்ளது.

 சிறுபான்மையினர் நலத்துறை, 70 லட்சம் ஏழை சிறுபான்மையின மாணவர்களுக்கு (முஸ்லீம், கிறித்தவர், சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி) மூன்று உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகையை வழங்கி வருகிறது.

கடந்த 2018-19 ஆண்டில் தோராயமாக ஒரு கோடிப்பேர் கல்வி உதவித்தொகைக்காக அரசுக்கு விண்ணப்பித்தனர். இதில் 6,80,000 பேருக்கு (34%) மட்டுமே அரசு உதவித்தொகை வழங்கியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான உதவித்தொகையிலும் 36 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக தொடக்க கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் அளவு 99.57% ஆக உள்ளது. மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் அளவு 17.2 சதவீதமாக உள்ளது.

தகவல்:Indiaspend

பிரபலமான இடுகைகள்