காதல் வார்த்தைகள் இவ்வளவா? - வரலாற்றில் புழங்கியவை!
pixabay |
இணையம் வந்ததிலிருந்து பழமையான தகவல் தொடர்புமுறைகள் பலவும் தேக்கத்தை சந்தித்துள்ளன. இன்று காதல் சொல்ல ரோஜா, ஆர்ச்சி அட்டைகளை தேடுவதை விட ஜிஃப் ஃபைலாக அனுப்புவது இன்னும் எளிமையாக உள்ளது. காதலைச் சொல்ல, குறிப்பிட்ட நபரை அழகாக இருக்கிறான் என்று சொல்ல என்ன வார்த்தையை முன்னர் பயன்படுத்தினார்கள் என்று அறிந்தால் நன்றாக இருக்குமே! அதற்காகத்தான் சில சொற்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
பக் ஹவுஸ்
காதலில் வீழ்ந்தேன் என்று சொல்கிறார்களே அதை ஒத்தது. புதிதாக காதல் செய்பவர்கள் இரவு முழுக்க போனில் பேசுவார்கள். சீனா - ரஷ்யா கூட அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அரசியல் சமாச்சாரங்களை பேசியிருக்க மாட்டார்கள். காதலில் மூழ்கி பைத்தியமாக திரிந்து நண்பர்களை ஒரண்டுக்கு இழுப்பதும் இவ்வகையில் சாரும். இதனை 21ஆம் நூற்றாண்டில் பக் ஹவுஸ் - Bughouse என்கிறார்கள்.
BUSS
பஸ் என்றால் கிஸ் என்று பொருள். அன்று பிரெஞ்சில் பைசர், ஸ்பானிஷில் பெசோ, இத்தாலியின் பசியோ என்று சொல்லி முத்தம் கேட்டனர். பாசன் - bassen என்ற சொல்லிலிருந்து உருவாகி வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சொல் தோன்றி புழங்கிய காலம் 1570
DIMBER
மரக்கடை என்று பொருள் அல்ல. கவரக்கூடிய வசீகரிக்கக்கூடிய என்று பொருள். ஆண்பால், பெண்பால் இல்லாத நியூட்ரல் சொல் இது. டிம்பர் போர்ட் என்று சொன்னால் அது பெண்ணைக்குறிக்கும். 17ஆம் நூற்றாண்டில் இத்தகைய வார்த்தைகள் புழங்கி வந்தன. ய
DULCINEA
டான் க்விக்சாட்டில் நாயகன் நாயகியை இந்த துல்சினியா வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பான். துல்சினியா என்றால் ஸ்பானிஷில் இனிப்பு என்று அர்த்தம். அகராதி தொகுப்பவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ காதல் வார்த்தை அல்லவா மக்களுக்கு பிடித்துவிட்டது..
JAM TART
காதலுக்கு இனிப்புகளை பரிசு கொடுப்பார்கள் அல்லவா? அதேதான். இந்த சொல்லோடு இதயத்தைச் சேர்த்தால் இனிய இதயம் என்ற ரீதியில் வரலாம்.
Prigster
அழகான பெண்ணைத்தான் மாநிறம் இருக்கும் ஆளும் விரும்புவான். கோவில் சிலை போல இருக்கும் பெண்ணுக்கு அப்ளிகேசன்கள் வராமல் இருக்குமா? இப்படி உங்களுக்கு செம டஃப் கொடுக்கும் குட்டி தனுஷ்கள் லெவல் ஆட்களை நாம் பிரிக்ஸ்டர் என்று சொல்லலாம். அதாவது உங்களுக்கான போட்டியாளர். பந்தயத்தில் முந்துபவர்களுக்கு சொத்தாக பெண் கிடைப்பார்.