உலகில் அதிகம் வெறுக்கப்படும் வார்த்தைகள்!




molly ringwald hate GIF
giphy


MOIST

ஈரப்பதம், ஈரக்கசிவு என பொருள் கொள்ளலாம். இந்த வார்த்தையை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெறுக்கின்றனர். இப்போது பேக்கரி விளம்பரம் வருகிறது. அதில் எங்கள் கேக் மிகவும் ஈரப்பதமான விதத்தில் இருக்கும். உங்களுக்கு சாப்பிடப்பிடிக்கும் என்பதற்கு சூப்பர் மாய்ஸ்ட் என்று பயன்படுத்தினால் அந்த விளம்பரம் வெற்றி பெறாது. பொருளும் மக்கள் வாங்குவது சந்தேகம்.

மேலும் சிலர் இதனை ஆபாசப்படங்களில் பயன்படுத்தும் வார்த்தையாகவும் பொருள் கொள்கின்றனர். இதனை எந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 


DROOL

உணவை எச்சில் வழிய பார்ப்பது என்பதுதான் இதன் பொருள். நாவல், கவிதை, பத்தி எழுத்து என அனைத்திலும் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. அப்புறம் ஒருகட்டத்தில் ச்சீ  என்ன இது நாகரிகமில்லாமல் என்று மக்களுக்கு தோன்றியதால் இச்சொல்லை ஒரங்கட்டிவிட்டனர்.

PANTIES

பெண்களின் உள்ளாடை. கூகுள் இறுக்கமான காற்சட்டை என பதில் தருகிறது. இதனை பெண்கள் வெறுக்கிறார்கள் என்று தகவல் கூறப்படுகிறது. உள்ளாடைகளை வெறுக்கவில்லை. இந்த சொல்லை வெறுக்கிறார்களாம். வுமன் அண்டர்வேர் என்று சொல்லவேண்டுமாம். ஆனால் பெயர் நீளமாக இருக்கிறதே? என கம்பெனிக்காரர்கள் யோசிப்பார்களாக இருக்கும். கே.கே. கார்மெண்ட்ஸ், ஜாக்கி, நாயுடு ஹால் கம்பெனிகள் நேரடியாக படத்தையே போட்டுவிடுகிறார்கள். எதற்கு வம்பு?

SUCK

உறிஞ்சிக்குடி என்ற பொருளில் பயன்படுத்தும் வார்த்தை. ஆங்கிலப்படங்களில் காட்சிகளுக்கு காட்சி வரும் சொல் இது. இதனை நாகரிக இடங்களில் சொல்வது சங்கடங்களை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். shit என்ற சொல்லை அடிக்கடி ஆங்கில கோமாட்டிகள் கூறுவார்கள். அதன் தமிழ் பொருள் மலம். இதனால் சக் என்ற இந்த வார்த்தை பலராலும் வெறுக்கும்படி ஆகிவிட்டது.

நன்றி - தாட்.கோ வலைத்தளம்








பிரபலமான இடுகைகள்